For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரோட்டைத் தாண்டி என்ன இருக்கு.. பின்னால் இருந்தபடி பார்த்து வண்டி ஓட்டலாம் - அசத்தும் சாம்சங்

Google Oneindia Tamil News

லண்டன்: நமக்கு முன்னாள் ஒரு பெரிய கண்டெய்னர் லாரி போய்க் கொண்டிருக்கிறது. இப்போது ஓவர் டேக் செய்ய வேண்டும்.

அந்த லாரிக்கு முன்னால் என்ன வாகனம் உள்ளது என்பதும் தெரிய வேண்டும்.

வழக்கமாக இதுபோன்ற சமயத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியது ஒரு டிரைவரின் கடமையாகும்.

சாம்சங்கின் புதிய டெக்னிக்:

சாம்சங்கின் புதிய டெக்னிக்:

ஆனால் இதை தற்போது சுலபமாக்கியுள்ளது சாம்சங்கின் அதி நவீன தொழில்நுட்பம்.

பெரிய சைஸ் டிவியாம்:

பெரிய சைஸ் டிவியாம்:

அதாவது நமக்கு முன்பு என்ன உள்ளது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது சாம்சங்கின் புதிய திரைத் தொழில்நுட்பம். அதாவது பெரிய வாகனங்களின் பின்னால் பொருத்தப்பட்ட பெரிய சைஸ் டிவி திரையில் அந்த வாகனத்திற்கு முன்பு என்ன உள்ளது என்பதை பின்னால் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம்.

பிரபலமாகும் சேப்டி டிரக்குகள்:

பிரபலமாகும் சேப்டி டிரக்குகள்:

இந்தப் புதிய வகை சேப்டி டிரக்குகள் பிரபலமாகி வருகின்றன. வயர்லஸ் கேமரா மூலம் இந்த காட்சி சாத்தியமாகியுள்ளது.

பண்லாமா வேண்டாமா?:

பண்லாமா வேண்டாமா?:

பார்ப்பதற்கு டிவி மாதிரி உள்ள இந்த வீடியோ திரையில், அந்த வாகனத்தின் முன்னால் உள்ள சாலைப் பகுதி நேரடியாக காட்சி தரும். இதைப் பார்த்து அந்த வாகனத்தை ஓவர்டேக் செய்வது குறித்த முடிவை பின்னால் வரும் வாகனம் எடுக்க முடியும்.

அர்ஜென்டினாவில் அறிமுகம்:

அர்ஜென்டினாவில் இந்த புதிய வகை டிரக்குகள் அரிமுகமாகியுள்ளன. இதன் மூலம் விபத்துகள் குறையும் என அவர்கள் நம்புகிறார்கள்.

இரவிலும் செயல்படுமாம்:

இரவிலும் செயல்படுமாம்:

அர்ஜென்டினாவில் ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். பெரும்பாலும் முன் பக்கம் உள்ளது என்ன என்று தெரியாமலேயே நடக்கும் விபத்துகள்தான் அதிகம். இந்த வயர்லஸ் கேமரா பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் செய்படக் கூடியதாகும் என்பது விசேஷமானதாகும்.

English summary
Samsung Argentina is hoping its new trucks will reduce the number of accidents caused by drivers overtaking trucks on single lane roads, unaware of what’s ahead of them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X