For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அய்யய்யே.. அத்தனை பேர் சுற்றி நிற்க.. அதுவும் பேண்ட்டிலேயே.. லீக் ஆயிடுச்சே அதிபர் வீடியோ.. பாருங்க

தெற்கு சூடான் அதிபர் தன்னுடைய பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்த வீடியோ ஷேர் ஆகி வருகிறது

Google Oneindia Tamil News

ஜுபா, தெற்கு சூடான்: அரசு சார்பில் நடத்தப்பட்ட பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சூடான் அதிபர் தான் அணிந்திருந்த பேண்ட்டிலேயே மேடையில் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

இந்நிகழ்வை பதிவு செய்த, அரசு டிவி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாக உள்ளது.

அந்நாட்டின் தெற்கு பகுதியில் லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாகவும், பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறிவர்களாகவும் உள்ளனர்.. தெற்கு சூடான் நாடு கடந்த 2011ம் ஆண்டு விடுதலை பெற்றது. அப்போதிருந்து இப்போதுவரை அதிபராக பதவி வகித்து வருபவர் சல்வா கீர்..

மத்திய அரசின் உயர்பதவி நோக்கமா? அம்பேத்கர் பெயரை கூட உச்சரிக்கவில்லை.. ஆளுநர் மீது அப்பாவு விமர்சனம் மத்திய அரசின் உயர்பதவி நோக்கமா? அம்பேத்கர் பெயரை கூட உச்சரிக்கவில்லை.. ஆளுநர் மீது அப்பாவு விமர்சனம்

பேண்ட்டில்

பேண்ட்டில்

இவர் கடந்த டிசம்பர் மாதம் அங்கு நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பங்கேற்றிருந்தார்.. விழாவில் அந்நாட்டில் தேசிய கீதம் பாடப்பட்டது.. அப்போது அதிபர் எழுந்து நின்று கொண்டு, அதற்கு மரியாதை செலுத்தினார். அப்போது அவருக்கு சிறுநீர் வந்துள்ளதாக தெரிகிறது.. அந்த நேரத்தில், தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் நேரத்திலேயே தான் அணிந்திருந்த பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.. தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தி கொண்டிருந்த அதே நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது, அங்கிருந்த டிவி கேமராக்களிள் பதிவாகிவிட்டது..

சிறுநீர்

சிறுநீர்

ஆனால், அந்த நாட்டு ஊடகங்களில் இந்த காட்சி ஒளிபரப்பவில்லை... அதையும் மீறி, இந்த வீடியோ எப்படியோ வெளியே லீக் ஆகிவிட்டது.. சமூக வலைத்தளங்களில் இதுதான் இப்போதைக்கு வைரலாகியும் வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சியாகிவிட்டனர். கடந்த டிசம்பர் 31-ம் தேதி புதிதாக கட்டப்பட்டிருக்கும் சாலையை அதிபர் திறந்துவைத்தாராம்.. அப்போதுதான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.. அதிபருக்கு 71 வயதாகிறது.. இந்த நிகழ்கில் எராளமான அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

லீக் வீடியோ

லீக் வீடியோ

அதிபருக்கு உடல் நிலை குறித்து விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்... அதேசமயம், இந்த வீடியோவை பரப்பியதாக சந்தேகப்பட்டு ஜோபல் டோம்பே, விக்டர் லாடோ, ஜோசப் ஆலிவர், ஜேக்கப் பெஞ்சமின், முஸ்தபா ஒஸ்மான், செர்பெக் ரூபன் உட்பட 7 பத்திரிகையாளர்களை ரகசிய உளவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை கவலை அளிப்பதாக தெற்கு சூடான் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பாட்ரிக் ஓயட் வருத்தமாக கூறியுள்ளார்.

பேண்ட்டில்

பேண்ட்டில்

மற்றொருபக்கம் கைது நடவடிக்கைக்கு தெற்கு சூடான் ஊடகவியலாளர் குழு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்ததுடன், அவர்கள் வெளியே வந்ததும் உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது... எனினும், ஒரு பொதுநிகழ்ச்சியில் அதிபர் இப்படி ஒரு காரியம் செய்யலாமா? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.. வயது மூப்பு, உடல்நிலை கருத்தி கொண்டு, இதை பெரிதுபடுத்த தேவையில்லை என்றும் சிலர் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
south sudan president wetting himself in pants and seven journalists arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X