கழுத்தை அறுப்போம்- லண்டனில் போராடிய தமிழர்களுக்கு இலங்கை ராணுவ அதிகாரி பகிரங்க கொலை மிரட்டல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஈழத் தமிழர்களை கொலை செய்வேன் என பகிரங்கமாக மிரட்டிய சிங்கள ராணுவ அதிகாரி- வீடியோ

  லண்டன்: இலங்கையின் சுதந்திர தின விழாவுக்கு எதிராக லண்டனில் போராடிய தமிழர்களை கழுத்தை அறுத்திடுவோம் என இலங்கை ராணுவ அதிகாரி மிரட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது,

  இலங்கையின் சுதந்திர தின விழா லண்டனில் உள்ள தூதரகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த சுதந்திர தினத்துக்கு எதிராக லண்டன் வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

  சிங்களவர் அதிர்ச்சி

  சிங்களவர் அதிர்ச்சி

  இப்போராட்டத்தின் போது பிரபாகரன் வாழ்க எனவும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதை சகித்துக் கொள்ள முடியாத இலங்கை தூதரக அதிகாரிகள் வெளியே வந்து பார்த்தனர்.

  கழுத்தை அறுப்போம் என மிரட்டல்

  கழுத்தை அறுப்போம் என மிரட்டல்

  அவர்களுடன் வந்த பிரியங்கா பெர்னாண்டோ என்ற ராணுவ அதிகாரி தமிழர்களைப் பார்த்து கழுத்து அறுத்திடுவோம் என மூன்று முறை சைகை காட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  மருத்துவமனை மீது தாக்குதல்

  மருத்துவமனை மீது தாக்குதல்

  இலங்கை இறுதி யுத்தத்தில் 59-வது டிவிசனில் இருந்த 11-வது கெமுனு காவல்படை பட்டாலியனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் இந்த பிரியங்க பெர்னாண்டோ. இந்த 59-வது டிவிசன் தான் முல்லைத்தீவு மருத்துவமனை மீது பீரங்கித் தாக்குதல் நடத்தியது என ஐநா விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  பாதுகாப்பு ஆலோசகர்

  பாதுகாப்பு ஆலோசகர்

  இத்தகைய வன்மம் வாய்ந்த உண்மையாக சிங்கள முகத்தைக் காட்டிய ராணுவ வெறிபிடித்த அதிகாரியை லண்டனில் இருந்து உடனே வெளியேற்ற வேண்டும் என இங்கிலாந்து எம்.பிக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியில் இருக்கிறார் பெர்னாண்டோ என்பது குறிப்பிடத்தக்கது,

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sri Lankan Army officer motioned a death threat to Eelam Tamils in London who were protesting against Sri Lanka's Independence Day.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற