For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்லீரலை தானமாக தர முன்வந்த குக்... வேண்டாம் என நிராகரித்த ஸ்டீவ் ஜாப்ஸ்!

Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்செலஸ்: ஆப்பிள் நிறுவனரான மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், தனது கல்லீரல் பாதிக்கப்பட்டபோது, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு மறுத்து விட்டாராம். தனது கல்லீரை தானமாக தர ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் முன்வந்தபோதும் கூட அதை வேண்டாம் என்று கூறி விட்டாராம் ஜாப்ஸ்.

Becoming Steve Jobs என்ற பெயரில் ஜாப்ஸின் சுயசரிதை நூல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில்தான் இந்த சம்பவம் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

இந்த நூலை எழுதியவர்களான பிரென்ட் ஸ்லென்டர் மற்றும் ரிக் டெட்ஸெலி ஆகியோர் டிம் குக்கிடம் கண்ட பேட்டி குறித்த விவரத்தை இதில் குறிப்பிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது....

Steve Jobs Refused Liver Transplant from Apple CEO Tim Cook

... குக் நம்மிடம் கூறுகையில், ஜாப்ஸுக்கு புற்றுநோய் வந்திருப்பது கண்டறியப்பட்டதும் நான் ஒரு ரத்த சோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கும், அவருக்கும் ஒரே மாதிரியான, அரிய வகை ரத்தம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நான் நேராக ஜாப்ஸ் வீட்டுக்குச் சென்றேன். அவருக்கு எனது கல்லீரலில் ஒரு பகுதியைத் தர தயாராக இருப்பதாக கூறினேன்.

அவருக்கு அருகே அவரது தொடையில் கை வைத்தபடி இவ்வாறு நான் கூறினேன். எனது வார்த்தையைக் கேட்ட அவர் வேகமாக எனது கையைத் தட்டி விட்டார். இல்லை, உன்னை நான் அவ்வாறு செய்ய விட மாட்டேன். நிச்சயம் செய்ய விட மாட்டேன் என்றார் வேகமாக.

13 வருடம் எனக்கும், அவருக்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது. அதில் என்னை மொத்தமாகவே அவர் 4 அல்லது 5 முறை மட்டுமே திட்டியிருப்பார் என்று குக் உருக்கமாக கூறியுள்ளார்.

மார்ச் 23ம் தேதி இந்த நூல் வெளியாகிறது.

English summary
Steve Jobs turned down a liver transplant from Apple CEO Tim Cook, according to a new biography. In "Becoming Steve Jobs," Brent Schlender and Fast Company executive editor Rick Tetzeli interviewed Cook, who revealed that he took a blood test after discovering Jobs had cancer. It turned out that they both had the same rare blood type. Cook went over to Jobs' house to offer him part of his liver. In liver transplants, both the donor and recipient's livers grow to a functional size. Still, according to Fast Company, Jobs wasn't having any of it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X