மனித மாமிசம் போன்ற ருசி.. சர்ச்சையில் சிக்கிய ஸ்வீடன் நிறுவனத்தின் புதிய பர்கர்!
நர மாமிச சுவையில் புதிய பர்கரை அறிமுகப்படுத்தியுள்ளது ஸ்வீடன் நிறுவனம் ஒன்று.
ஸ்டாக்ஹோம் : ஸ்வீடனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நர மாமிச சுவையில் பர்கரைத் தயாரித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சது..' என விதவிதமாக சாப்பாட்டு சுவையைத் தேடி அலைபவர்கள் உலகம் முழுவதுமே இருக்கிறார்கள். இவர்களது நாவிற்கு விருந்து வைப்பது போன்ற சுவையைத் தருவதற்காக உணவு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது உணவு வகைகளை அறிமுகப்படுத்துகின்றன. இதற்கென பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி, அவை புதிய சுவைகளை கண்டுபிடிக்கின்றன.
அப்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உணவுதான், நர மாமிச சுவையில் உருவாக்கப்பட்டுள்ள வேகன் பர்கர்.

பர்கர் அறிமுகம்
ஸ்வீடனைச் சேர்ந்த Oumph! என்ற நிறுவனம் தான் இந்த பர்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தாவரங்களைக் கொண்டு இறைச்சி தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இதுவரை யாரும் கண்டுபிடித்திராத புதிய வகை உணவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் இந்தப் பர்கரை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

நர மாமிச சுவை
இந்த பர்கரில் வைக்கப்பட்டுள்ள பேட்டி(patty)யானது, முற்றிலும் தாவரங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதுதான். ஆனால் சுவையில் இது மனித மாமிசத்தைப் போன்று இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த பேட்டியை வைத்து மற்ற பர்கர்களைப் போலவே இதனை தயாரித்துத் தருகின்றனர்.

விருது
விலங்கு வதையை விரும்பாதவர்கள், வீகன் உணவுப் பிரியர்களுக்காக பிரத்யேகமாக இந்த வகை மாமிச பர்கர் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு, விலங்குகளை வளர்ப்பதால் சுற்றுச்சூழலுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும், இது போன்ற மாற்று கண்டுபிடிப்புகள் மூலம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த பர்கரை தயார் செய்ததற்காக இந்நிறுவனத்திற்கு சில்வர் லயன் (Silver Lion) என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

கண்டனம்
கடந்த ஆண்டு ஹாலோவன் (Halloween) கொண்டாடப்பட்டபோது முதன் முதலில் இந்த போலி நர மாமிசம் தயாரிக்கப்பட்டது. அப்போதே இது சர்ச்சையில் சிக்கியது. ஒருவேளை மனிதர்கள் இதுபோன்று நரமாமிச சுவைக்குப் பழகினால், அது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைக்கு வழி வகுக்கும் என பலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அதற்கும் இந்நிறுவனம் விளக்கம் அளித்தது.

இதுதான் காரணம்
அதில், 'எங்களது நோக்கம் இந்த தாவர இறைச்சியை மனிதர்கள் சாப்பிடவேண்டும் என்பதே தானே, தவிர மனிதனின் இறைச்சியைச் சாப்பிட சொல்வது அல்ல' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தங்களது இந்த புதிய பர்கர் குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஆன்ட்ரே லிண்டென் கூறுகையில், "எங்களுக்கு எந்த விதமான சுவையும், அமைப்பும் வேண்டும் என்று தெரிந்த பின், இந்த பர்கரை சீக்கிரமாக தயாரித்துவிட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications