For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகிலேயே சிரியா போர் பற்றி அதிகம் தேடியது தமிழர்கள்தான்.. என்ன காரணம்?

சிரியாவில் நடக்கும் போர் பற்றி தமிழர்கள்தான் உலகிலேயே கூகுளில் அதிகம் தேடி இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சிரியாவை கூகுளில் அதிகம் தேடிய தமிழர்கள்- வீடியோ

    டமாஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் போர் பற்றி தமிழர்கள்தான் உலகிலேயே கூகுளில் அதிகம் தேடி இருக்கிறார்கள். முதல் 50 இடங்களில் 90 சதவிகித இடங்கள் தமிழகத்தை சேர்ந்தது.

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

    இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

    கூகுள்

    கூகுள்

    கடந்த 7 நாட்களில்தான் இதுகுறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டு இருக்கிறது. முக்கியமாக சிரியா (syria) என்று ஆங்கிலத்திலும், சிரியா தமிழ் (syria tamil) என்றும் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது. அதன்பின் சிரியா புகைப்படங்கள், வீடியோக்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை, போர் காரணம், சேவ் சிரியா என்று நிறைய விஷயங்கள் தேடப்பட்டு இருக்கிறது.

    ஆவடிதான் முதல் இடம்

    ஆவடிதான் முதல் இடம்

    இதில் தமிழகத்தை சேர்ந்த ஆவடிதான் முதல் இடம் பிடித்து இருக்கிறது. ஆவடி பகுதியில் உள்ள மக்கள் அதிகமாக சிரியா (syria) என்று தேடி இருக்கிறார்கள். மூன்றாம் இடத்தில் சென்னையை சேர்ந்த சிறுசேரி இருக்கிறது. 5 வது இடத்தில் சென்னையை சேர்ந்த காட்டாங்குளத்தூர் இருக்கிறது.

    முதல் பத்து இடங்கள்

    முதல் பத்து இடங்கள்

    8,9,10 ஆகிய இடங்களில் நாகர் கோவில், தஞ்சாவூர் ,மதுரை ஆகிய இடங்கள் இருக்கிறது. இதெல்லாம் உலக அளவில் வந்த இடங்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்தியர்கள்தான் இது பற்றி அதிகம் தேடி இருக்கிறார்கள்.

    50 இடம்

    50 இடம்

    முதல் 50 இடத்தில் முக்கால்வாசி தமிழ்நாட்டு பகுதிகள்தான் இருக்கிறது. கன்னியாகுமரி தொடங்கி பிராட்வே வரை எல்லா இடத்தில் இருந்து சிரியா குறித்து தேடி இருக்கிறார்கள். அதேபோல் பொதுவாகவே சிரியா நாடுகள் மட்டும் இதுகுறித்து தேடி இருக்கிறார்கள்.

    ஏன் காரணம்

    ஏன் காரணம்

    தமிழர்கள் இப்படி தேடி படித்ததற்கு நிறைய உளவியல் காரணங்கள் இருக்கிறது. முக்கியமாக இலங்கை போர் ஒரு காரணமாக இருக்கிறது. போரின் கஷ்டங்கள் என்ன என்று தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தமிழர்கள் இது குறித்து அதிகம் தேடி இருக்கிறார்கள்.

    கொஞ்சம்தான்

    கொஞ்சம்தான்

    ஆனால் போரை முன்னின்று நடத்தும் ஈராக், ரஷ்யா, அமெரிக்க போன்ற நாடுகள் மிகவும் குறைவாகவே தேடி இருக்கிறது. அனைத்து நாடுகளும் 30வது இடத்திற்கு பின்பே இருக்கிறார்கள். முக்கியமாக ரஷ்யா 63 இடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    War in Syria kills 600 people in just 8 days. The war is going on between Syria government army and Anti goverment forces. Syria army leads the with the help of Russia. Nearly 393,000 lakh people trapped inside the Syrian enclave of eastern Ghouta.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X