For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுச்சேரியில் இருந்து படகில் சென்ற 153 ஈழத் தமிழர்கள் ஆஸ்திரேலியா அருகே நடுக்கடலில் தத்தளிப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

Tamil refugee boat from India in distress near Christmas Island
சிட்னி: புதுச்சேரியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக அடைக்கலம் கோரி படகில் சென்ற 153 ஈழத் தமிழர்கள் படகு கோளாறால் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஈழத் தமிழ் அகதிகள் 153 பேர் கடந்த 13-ந் தேதியன்று புதுச்சேரி அருகே இருந்து படகு ஒன்றின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக அடைக்கலம் கோரி சென்றனர். இவர்கள் சென்ற படகு, ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவுகள் அருகே செல்லும் போது திடீரென கோளாறு ஏற்பட்டு நின்றது.

இதனால் படகு மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படகில் 37 குழந்தைகள், 32 பெண்களும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றுமாறு ஆஸ்திரேலிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகைய ஆபத்தான படகு பயணங்கள் மூலம் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்கள் உயிரிழந்துள்ளதால் உடனடியாக அனைவரையும் காப்பாற்றுமாறு தமிழர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

English summary
A boat reportedly carrying 153 presumably Tamil refugees that left Puducherry two weeks ago is said to have reached near Christmas Island and couple of people on board who have spoken to the media via satellite phone have identified themselves as refugees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X