For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கீழ் மார்பு தெரிவது போல செல்ஃபி கூடாது...மீறினால் 5 வருஷம் சிறை.. "தாய்" கண்டிப்பு!

Google Oneindia Tamil News

பாங்காக்: பெண்கள் மார்புப் பகுதி இறக்கமாக தெரியும் படி செல்ஃபி எடுக்கக் கூடாது என தாய்லாந்து அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆறாம் விரலாய் மாறிப் போன செல்போனில் கேமரா கிடைத்த பிறகு, தன்னைத் தானே போட்டோ எடுத்துக் கொள்ளும் செல்ஃபிக்கு மோகம் மக்களிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. அவ்வாறு விதவிதமாய் தன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

Thailand warns women against posting 'underboob' selfies

ஆனால், இவ்வாறு எடுக்கப் படும் செல்ஃப்பிக்களில் சிலர் ஆபாசமாக எடுக்கின்றனர். அவை சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப் படும் போது, அவற்றை சிலர் மேலும் மோசமாக்கி விடுகின்றனர். இதனால் பெண்கள் அதிகளவு அவதூறு செய்திகளுக்கு ஆளாகிறார்கள்.

எனவே, இதனை குறைக்கும் வகையில் தாய்லாந்து அரசு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், செல்ஃபி எடுப்பதற்கு தனது நாட்டு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த புதிய உத்தரவுப் படி, செல்ஃபியில் தாய்லாந்து பெண்கள் மார்பு பகுதியில் இறக்கமாக போட்டோ எடுக்கக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மேலும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தாய்லாந்து கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
Thailand's military government has warned women against posting "selfie" photos of the lower half of their breasts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X