For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

களைகட்டியது காளை விரட்டும் திருவிழா... ஸ்பெயினில் உற்சாக வெள்ளம்

Google Oneindia Tamil News

ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான காளை விரட்டும் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

ஸ்பெயின் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாம்ப்லோனா (Pamplona) என்ற இடத்தில், ஆண்டுதோறும் காளை விரட்டும் திருவிழா நடைபெறும். அந்தவகையில், 9 நாட்கள் நடைபெறும் இந்தபோட்டியில், ஏராளமானோர் வெள்ளை நிற உடையணிந்து கழுத்தில் சிவப்பு நிற கைக்குட்டையை கட்டிக்கொண்டு போட்டியில் கலந்து கொண்டனர். தொடக்

The bull riding festival began in Spain

தமிழகத்தில் மஞ்சுவிரட்டு போல், ஸ்பெயினில் காளை விரட்டு திருவிழா உற்சாகமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தொடங்கி உள்ள திருவிழாவைக் காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் ஸ்பெயினில் கூடியுள்ளனர்.

குறுகிய தெரு வழியாக ஓடவிடப்பட்ட காளைகளை, வீரர்கள் ஓடிச்சென்று அடக்க முயன்றதில் ஒருவர் காளை முட்டி படுகாயமடைந்தார். மேலும், இருவர் கூட்டத்தில் மிதிப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தனர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 3 பேரும் படுகாயமுற்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, பார்வையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே, இந்த விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காளைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், போட்டியை தடை செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.

English summary
Spain's bull riding has begun as a spectacle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X