For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆமா, அதென்ன செவ்வாயில் ப்ளூ கலர்ல.. ஏதோ தெரியுதே?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் நீல நிறத்தில் ஏதோ தெரிவது விஞ்ஞானிகளிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அது தண்ணீரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

நீல நிறத்தில் நீர் நிலை போலவே அது காட்சி தருகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள இந்த காட்சி தற்போது புகைப்படமாக நாசாவுக்குக் கிடைத்துள்ளது. ஆனால் இது நிச்சயம் தண்ணீராக இருக்காது. மாறாக காட்சிப் பிழை போன்றதுதான் இது .. அதாவது கானல் நீராக இருக்கலாம் என்று ஐரோப்பிய விண்வெளிக் கழகம் கூறியுள்ளது.

நீல நிறத்தில் ஆங்காங்கே திட்டுத் திட்டாக தெரிவது பல காலமாக தேங்கிப் போன கருப்பு நிற குப்பைக் கூளங்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

காற்று தான் காரணம்...

காற்று தான் காரணம்...

பூமியைப் போவே செவ்வாய் கிரகத்தையும் காற்றுதான் பல காலமாக பூகோள அமைப்பை மாற்றியமைத்துள்ளது. பாறைகள் உருவாவதும், மணற் குன்றுகள் தோன்றவும், மென்மையான தரைப்பரப்பு ஏற்படவும் இந்த காற்றே காரணம் என்று கூறுகிறார்கள் வி்ஞ்ஞானிகள்.

குப்பை மலை...

குப்பை மலை...

மிகக் கடுமையான காற்று காறணமாக மாபெரும் புயல்கள் ஏற்பட்டு செவ்வாயின் ஒரு பக்கமாக போய் குப்பை, தூசியை மலை போல குவித்து வைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த காற்று காரணமாக ஏற்பட்ட குப்பைக் குன்றுகளே பார்ப்பதற்கு நீல நிறத்தில் தெரியலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

சான்சே இல்லை...

சான்சே இல்லை...

எனவே இது தண்ணீராக இருக்க வாய்ப்பில்லை என்றும் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் அராபியா டெர்ரா பகுதியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

நீலநிற பேட்சுக்கள்...

நீலநிற பேட்சுக்கள்...

பல்வேறு வகையான சைசில் இந்த நீல நிற பேட்சுக்ள் காணப்படுகின்றன. கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. தற்போது வெளியாகியுள்ளது.

English summary
An image has emerged showing what looks like hints of blue, liquid water gathering on Mars’ surface. But according to the European Space Agency (Esa), these mysterious patches are nothing more than an optical illusion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X