தீவிரமாக எதிர்க்கும் பஞ்ஷிர் எதிர்ப்பு படை.. வேறுவழியின்றி பேச்சுவார்த்தையில் இறங்கிய தாலிபான்கள்!
காபூல்: தாலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் உள்ளூர் மக்கள் பலர் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
அங்குள்ளவர்கள் பலர் அகதிகளாக இந்தியா உள்பட பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியவுடன் ஆப்கானில் ஆட்சி பொறுப்பை தாலிபான்கள் அறிவிக்க உள்ளனர்.

பஞ்ஷிர் எதிர்ப்பு படை
அமெரிக்க படைகள் தங்களுக்கு இடையூறு தரக்கூடாது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தாலிபான்களுக்கு சிம்ம செப்பமானமாக விளங்குவது தலிபான்களின் எதிர்ப்பு படை. தலிபான்கள் ஆப்கானில் மற்ற இடங்களை கைப்பற்றிய போதிலும் தலிபான்களின் எதிர்ப்பு படை ஆதிக்கம் செலுத்தும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கை தொட கூட முடியவில்லை. அந்த பள்ளத்தாக்கு நெடு ஆண்டு காலமாக தலிபான்களுக்கு எதிரான கோட்டையாக இருந்து வருகிறது.

மாவட்டங்களை கைப்பற்றினர்
தாலிபான்கள் பெண்களை மோசமாக நடத்தி வருவதாக கூறி தலிபான்களின் எதிர்ப்பு படை தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கைர் முஹம்மது அந்தராபியின் கீழ் உள்ள எதிர்ப்புப் படைகள், தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்த பொல்-இ-ஹேசர், தே சலாஹ் மற்றும் பானு ஆகிய மாவட்டங்களை மீட்டதாக தகவல்கள் ஏற்கனவே உலா வந்தன. அவர்கள் இப்போது மற்ற மாவட்டங்களை நோக்கி முன்னேறி வருவது தாலிபான்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தாலிபான்கள் பேச்சுவார்த்தை
இதனால் பஞ்ஷிர் எதிர்ப்பு படைகளுடன் தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி விட்டனர். தாலிபான்களின் 40 உறுப்பினர்கள் அடங்கிய குழு, பஞ்ச்ஷிரில் உள்ள எதிர்ப்புப் படைகளை பேச்சுவார்த்தைக்காக சந்தித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், பேச்சுவார்த்தையின் முடிவு தெளிவாக தெரியவில்லை. எதிர்ப்பு படைகளின் தலைவர் அஹ்மத் மசூத் தாலிபான்களுடன் அமைதியான பேச்சுவார்த்தைகளை நடத்த விரும்பினார், ஆனால் அவரது படைகள் தாலிபான்களை எதிர்த்து போராடத் தயாராக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்புப் படைகள் தயார்
ஆப்கானிஸ்தானின் துணை ஜனாதிபதியாக இருந்த அம்ருல்லா சலே, ஆப்கானை தாலிபான்கள் கையகப்படுத்திய பின்னர் நாட்டின் செயல் ஜனாதிபதியாக தன்னை அறிவித்துக் கொண்டார். தற்போது தாலிபான்கள் எதிர்ப்பு படைகளுடன் கைகோர்த்துள்ள அவர் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறினார். எந்தவொரு நிகழ்விற்கும் எதிர்ப்புப் படைகள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியர்கள் மீட்பு
இதெற்கிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்டு கொண்டு வர இந்தியா தினமும் சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. இதன் மூலம் இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு வருபவர்கள் இந்தியாவில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு முகாமில் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் ஆப்கானில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.

ஆப்கானில் இருந்து வந்த 16 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் செவ்வாய்கிழமை ஆப்கானில் இருந்து வந்த 78 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் அறிகுறியற்ற வகையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அனைவரும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவர்களில் சீக்கியர்களின் புனித நூலை ஆப்கானில் இருந்து கொண்டு வந்த 3 பேரும் உள்ளனர். ஏற்கனவே அவர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அந்த புனித நூலை கையில் வைத்தபடி போஸ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications