பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட 3 விரல் மம்மி.. வேற்றுகிரகவாசி என பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரு : பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட பழமைவாய்ந்த 'மம்மி'க்கு 3 விரல்கள் மட்டுமே இருந்ததால் அது ஏலியன் மம்மியா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

தெற்கு பெருவின் நாஸ்காவில் மிகப் பழமை வாய்ந்த 'மம்மி' ஒன்று கண்டறிப்பட்டுள்ளது. நாஸ்கா பழம்பெரும் பொருட்கள் கிடைக்கும் மிகச்சிறந்த தொல்லியல் ஆய்வு இடமாக விளங்குகிறது. அந்தப் பகுதியில் தற்போது கிடைத்துள்ள மம்மி ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் உட்கார்ந்த நிலையில் மனிதன் மண்டைஓடு, எலும்பு, முதுகுத் தண்டு என்று அனைத்தும் மனிதன் போல தோற்றம் தந்தாலும், அந்த மம்மிக்கு கைகளிலும், கால்களிலும் மூன்று விரல்கள் மட்டுமே நீண்டு காட்சியளிக்கின்றன. இந்நிலையில் மனிதனைப் போல் இருந்தாலும் இது மனிதன் அல்ல ஏலியன் மம்மி என்ற சர்ச்சை எழுந்தது.

தொடரும் ஆய்வுகள்

தொடரும் ஆய்வுகள்

ஏலியன்கள் இருந்தது தொடர்பான ஆய்வுகள் நுண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றன. உண்மையிலேயே வேற்றுகிரக வாசிகள் உள்ளனரா என்ற ஆய்வை இன்னும் ஆராய்ச்சியாளர்கள் முன்எடுத்து வருகின்றனர். ஏனெனில் ஏலியன்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் இல்லை.

21ம் நூற்றாண்டின் 'மம்மி'

21ம் நூற்றாண்டின் 'மம்மி'

இந்நிலையில் தெற்கு பெருவில் கிடைத்துள்ள இந்த 'மம்மி' 21ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிக முக்கியமான மம்மி இது என்று சொல்லப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் அல்லாத வேற்றுகிரக உயிரினம் ஒன்று பூமி வந்ததற்கான ஆதாரம் தான் இந்த மம்மி என்று ஏலியன் இருப்பதாக நம்புபவர்கள் கூறுகின்றனர்.

சுண்ணாம்புச் சிலை

சுண்ணாம்புச் சிலை

5அடி 6 அங்குல உயரத்தில் உள்ள இந்த மனிதன் போன்ற மம்மி வெறும் சுண்ணாம்புக் கட்டி தான், அது மம்மியல்ல என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது மம்மி என்று சொல்வதே தவறானது என்று கூறும் நிலையில் ஏலியனாக இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

ஏலியனா?

ஏலியனா?

ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் சில மதச் சடங்குகளுக்காக இது கலை வேலைப்பாடு செய்யப்பட்ட ரெப்டிலியன் ஏலியனாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இதே போன்று 'மம்மிகள்' குறித்து ஆய்வு நடத்தி வரும் உலக காங்கிரஸ் அமைப்பு இது மம்மியல்ல போலியானது என்று கூறியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A group of researchers claim they have found proof of aliens near the city of Nazca in Peru.
Please Wait while comments are loading...