ஆரவாரமாக நடந்து கோரமாக முடிந்த ‘சர்க்கஸ்’.. ரிங் மாஸ்டர் மீது திடீரென பாய்ந்து குதறிய புலி! ஷாக்!
ரோம்: இத்தாலியில் சமீபத்தில் நடந்த 'சர்க்கஸ்' நிகழ்ச்சியின் போது யாரும் எதிர்பாராத விதமாக பயிற்சியாளர் மீது ஒரு புலி பாய்ந்து கடித்துக் குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலியின் இந்த கொடூர தாக்குதலில் கழுத்து, தலை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த சர்க்கஸ் பயிற்சியாளர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பயிற்சியாளரை புலி தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி பார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்து வருகிறது.

ஆபத்தான விளையாட்டு
பல நூறு பேரை ரசிக்க வைப்பதற்காக, சில பேரின் உயிரை பணயமாக வைத்து விளையாடும் ஆட்டம்தான் 'சர்க்கஸ்'. குரூரமான வன விலங்குகளை குட்டியாக இருக்கும்போதிருந்தே பழக்கி, அதை வித்தை காட்ட செய்வதுதான் சர்க்கஸ்களின் சாராம்சம். இவ்வாறு விலங்குகளை வைத்து வித்தை காட்ட, பிரத்யேகமான பயிற்சிகளை முடித்தவர்கள் 'ரிங் மேன்' (Ring man) ஆக அமர்த்தப்படுகிறார்கள், சிங்கம், புலி, கரடி, யானை உள்ளிட்ட ஆபத்தான விலங்குகள் கூட இந்த ரிங் மேன்களின் சொல்லுக்கு பூனையாக அடிபணியும். ஆனால் என்னதான் இருந்தாலும், அந்த விலங்குகளிடம் இயற்கையாக இருக்கும் ஆக்ரோஷமும், குரூரமும் அவ்வப்போது வெளிப்படவே செய்யும். இப்படி சர்க்கஸ்களில் விலங்குகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பலர். இதனைக் கருத்தில்கொண்டு தான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விலங்குளை வைத்து சர்க்கஸ் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சைபீரிய புலிகளை வைத்து வித்தை
இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்ற ஒரு சர்க்கஸும் இப்படி விபரீதமாக முடிந்திருக்கிறது. இத்தாலியின் லெஸ்ஸி நகரில் சமீபத்தில் ஒரு பிரம்மாண்டமான சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சர்க்கஸை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில், குதிரை, ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி போன்ற சாதுவான மிருகங்களை வைத்து வித்தைகள் காட்டப்பட்டன. அதன் பின்னர், புலிகளை வைத்து ஆடும் சர்க்கஸ் தொடங்கியது. அதுவும், உலகிலேயே மிகவும் ஆபத்தான புலி வகையாகன சைபீரிய புலிகளை வைத்து இந்த சர்க்கஸ் நடைபெற்றது.

ஒரே நொடியில் ரத்தக்களரி
5 சைபீரிய புலிகளை வைத்து இவான் ஆர்ஃபேய் (31) என்ற ரிங் மேன் வித்தை காட்டிக் கொண்டிருந்தார். புலிகளை சைக்கிள் ஓட்டச் செய்வது, நெருப்பு வளையத்திற்குள் பாய செய்வது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கண்களில் குரூரப் பார்வையுடன் இருந்த புலிகள், ரிங் மேனின் பேச்சுக்கு கட்டுப்படுவதை பார்வையாளர்கள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, உருளை போன்ற வடிவங்களில் உள்ள கற்கள் மீது புலிகளை இவான் நிற்க வைக்க கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு புலி, யாரும் எதிர்பாராதவிதமாக இவானின் இடது காலில் ஆக்ரோஷமாக கடித்தது.

கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை
இதை சற்றும் எதிர்பார்க்காத இவான், அந்த புலியை அங்கிருந்து செல்லுமாறு கட்டளையிட்டார். ஆனால், ரத்த ருசி கண்ட புலி, வெறியாட்டத்தில் இறங்கியது. காலை கடித்து ரத்தத்தை உறிஞ்சிய புலி, அடுத்த நொடியே இவானின் கழுத்தையும், தலையையைும் தனது கோரைப் பற்களால் பதம் பார்த்தது. கூண்டுக்குள் ரத்தம் தெறிக்கத் தெறிக்க நடந்த இந்த அசம்பாவிதத்தை பார்த்து மக்கள் பயத்தில் அலறத் தொடங்கினர். இதையடுத்து, அங்கிருந்த மற்ற பயிற்சியாளர்களும், பாதுகாவலர்களுக்கும் கூண்டுக்குள் நுழைந்து, அந்த புலியை அடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். புலியின் கொடூரத் தாக்குதலில் உடல் முழுவதும் படுகாயமடைந்த இவான், அருகில் உள்ள மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இந்த பயங்கர வீடியோவை அங்கிருந்த பார்வையாளர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்தக் காட்சி தற்போது தீயாகப் பரவி வருகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications