For Daily Alerts
காமன்வெல்த்தில் பரபரப்பு: 2 இந்திய விளையாட்டு துறை நிர்வாகிகள் ஸ்காட்லாந்தில் கைது
கிளாஸ்கோ: இந்திய விளையாட்டு துறையின் இரு முக்கிய நிர்வாகிகள் ஸ்காட்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் நிலையில் இவர்கள் இருவரும் கைதாகியுள்ளனர்.
இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜிவ்மேத்தா மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கான நடுவரான வீரேந்திர மாலிக் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அறிவித்துள்ளது.
இதில் ராஜிவ்மேத்தா, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், வீரேந்திர மாலிக், பாலியல் சீண்டல் குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காமன்வெல்த் போட்டிகள் இன்று நிறைவடைய உள்ள நிலையில், இந்த கைது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதான இவரும் நாளைதான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.