ஆப்ரேஷன் "கங்கா!" உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவர்! பத்திரமாக தாயகம் திரும்புகிறார்
கீவ்: உக்ரைன் நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சில் ரஷ்யா போர் தொடங்கியது. ரஷ்யாவின் பாதுகாப்பு கருதியே இந்த ராணுவ நடவடிக்கை தொடங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார்.
இந்தப் போர் 11 நாட்களைக் கடந்து 12ஆவது நாளாக இன்றும் கூட தொடர்கிறது. ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

உக்ரைன் போர்
இந்தப் போர் காரணமாக உக்ரைன் வான்வழி மூடப்பட்டுள்ளது. போர் தொடங்கியது முதல் உக்ரைனில் இருந்து எந்தவொரு பயணிகள் விமானங்களும் இயக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, போர் தொடங்கிய சமயத்தில் இந்தியர்கள் மட்டும் சுமார் 16,000க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்ததாகத் தகவல் வெளியானது. அவர்களை அண்டை நாடுகள் உதவியுடன் வெளியுறவுத் துறை மீட்டு வருகிறது.

காயமடைந்த இந்திய மாணவர்
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இப்போது இந்தியர்கள் யாரும் இல்லை என்றாலும் கூட போர் தொடங்கிய சமயத்தில் அங்குப் பல நூறு இந்திய மாணவர்கள் இருந்தனர். அப்படி கீவ் நகரில் இருந்த இந்திய மாணவர்களில் ஒருவர் தான் ஹர்ஜியோத் சிங். 31 வயதான ஹர்ஜியோத் சிங், கடந்த பிப். 27ஆம் தேதி கீவ் நகரில் இருந்து வெளியேற டாக்ஸி பிடிக்கக் காத்திருந்த சமயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.

உக்ரைனில் சிகிச்சை
இதில் ஹர்ஜியோத்தின் மார்பு பகுதி உட்பட நான்கு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் அவரது பாஸ்போர்ட்டும் தொலைந்துவிட்டது. உக்ரைனில் போர் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், ஹர்ஜியோத் சிங்கை இந்தியா அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
Recommended Video

தாயகம் அழைத்து வரப்படுகிறார்
இதையடுத்து சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அவர் சமீபத்தில் தான் போலந்து அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையே ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் ஹர்ஜியோத் சிங் இந்தியா அழைத்து வரப்படுகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹர்ஜியோத் சிங்கை விமானப்படை வீரர்கள் விமானத்தில் ஏற்றும் படங்களும் வெளியாகி உள்ளன. அவருடன் சுமார் 200 மாணவர்கள் அந்த விமானப்படை விமானத்தில் தாயகம் திரும்புகின்றனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications