உக்ரைன் - ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் இடையே 10ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை - போர் முடிவுக்கு வருமா
ரஷ்ய- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரும் 10 ஆம் தேதி துருக்கியில் சந்தித்துப் பேச உள்ளனர்.
கீவ்: போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் இடையே மார்ச் 10ஆம் தேதி துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. போர் முடிவுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 12 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷ்யா, உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது.
அதே நேரத்தில் உக்ரைனும் நாட்டைக் காக்க ஈடுகொடுத்து போராடி வருகிறது. உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போர் நிறுத்தம்
பெலாரஸில் இருநாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் சில முடிவுகள் எட்டப்பட்டதை அடுத்து நான்கு முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்துவதை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

3ஆம் கட்ட பேச்சுவார்த்தை
இதனிடையே போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.மனிதாபிமான அடிப்படையில் தளவாடங்களை மாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இருப்பினும், நிலைமையை கணிசமாக மேம்படுத்தும் முடிவுகள் எதுவும் ஏற்படவில்லை.

மார்ச் 10 துருக்கியில் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் ரஷ்ய- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரும் 10 ஆம் தேதி துருக்கியில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ட்மிரோ குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜே லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியின் கடற்கரை பகுதியான அண்டலியா மாகாணத்தில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர். இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் நேரடியாக சந்தித்துப் பேச உள்ளதால், போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
Recommended Video

மோடி பேச்சு
முன்னதாக நேற்றைய தினம் பாரத பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைப்பேசியில் பேசினார். உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்பது குறித்து பேசியதோடு, இரு நாட்டு அதிகாரிகளும் போரை முடிவுக்குக் கொண்டு வர நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதுதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications