For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எச்சரிக்கை! அதிகரிக்கும் ஏழை-பணக்காரர்கள் இடைவெளி! சரி செய்யாவிடில் பூமி அனைவருக்குமானதாக இருக்காது!

Google Oneindia Tamil News

கெய்ரோ: உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை விரைவில் 800 கோடியை தொட உள்ள நிலையில் ஏழை-பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளியை நாம் குறைக்கவில்லையெனில் உலகம் சமநிலையை இழக்கும் என ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.

ஐநா காலநிலை மாற்றம் தொடர்பான (COP27) மாநாடு எகிப்தில் நடைபெற்று வரும் நிலையில் அதில் சிறப்புரையாற்றிய குட்டரெஸ் இக்கருத்தை கூறியுள்ளார்.

உலகம் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் எனில் இதனை நாம் கட்டாயம் செய்தாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களே.. நெக்ஸ்ட் ரவுண்டுக்கு ரெடியா.. நவம்பர் 16ம் தேதி உருவாகுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி மக்களே.. நெக்ஸ்ட் ரவுண்டுக்கு ரெடியா.. நவம்பர் 16ம் தேதி உருவாகுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

மாநாடு

மாநாடு

எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் 27வது காலநிலை மாற்ற மாநாடு (Cop27) நடைபெற்று வருகிறது. இதில் 100க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த 1995ம் ஆண்டிலிருந்து காலநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்று வந்தாலும், இதனை சரி செய்ய நாம் இன்னமும் முழு முயற்சியை எடுக்கவில்லையென ஐந பொதுச் செயலாளர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். சரியாக சொல்வதெனில் 1986 பிப்ரவரிக்கு பிறகு பிறந்த எவரும் இதுவரை தங்கள் வாழ்நாளில் இயல்பான மாதத்தை பார்த்திருக்கவில்லை. அந்த அளவுக்கு காலநிலை மாற்றம் தீவிரமடைந்திருக்கிறது.

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம்

இதனை சரி செய்ய இந்தியாவை போன்று 5 மடங்கு பெரிய நிலப்பரப்பு முழுக்க காடுகளை வளர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று அவர் ஆற்றிய சிறப்புரையில் சில முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுள்ளார். அதாவது, "உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை விரைவில் 800 கோடியை தொடும் நிலையில் ஏழை-பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளியை நாம் குறைக்கவில்லையெனில் உலகம் சமநிலையை இழக்கும்" என்று எச்சரித்துள்ளார். மேலும், "உலகில் உள்ள பாதி நிலப்பரப்பை வெறும் ஒரு சில பெரும் பணக்காரர்கள் மட்டும் கட்டுப்படுத்துகின்றனர்.

1% பணக்காரர்கள்

1% பணக்காரர்கள்

இந்த 1% ஆக இருக்கும் பெரும் பணக்காரர்கள் உலக மக்கள் அனைவரும் பெரும் வருமானத்தில் 5ல் 1 பங்கை பெறுகின்றனர். அதாவது 799 கோடி மக்களுக்கு 4% வருமானமும் 1% பணக்காரர்களுக்கு 1% வருமானமும் கிடைக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு, ஏழை மக்களை விரைவாக உயிரிழக்க வைக்கவும், பணக்கார நாடுகளில் உள்ள மக்களை இந்த ஏழை மக்களை விட 30 ஆண்டுகள் கூடுதலாக வாழ வைக்கவும் வழிவகுக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த ஏழை-பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரிப்பானது, கொரோனா காலகட்டங்களில் அதிதீவிரமடைந்துள்ளது.

மாசு

மாசு

1% பணக்காரர்கள் நடத்திடும் நிறுவனங்களிலிருந்து வெளியேறும் காற்று மாசுதான் உலகத்தின் காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. இது வளர்ந்த நாடுகள் மீதான கோபத்தை உருவாக்குகிறது. காலநிலை மாற்றமும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் யதார்த்தம் அல்ல. இது திட்டமிட்டு திணிக்கப்படுகிறது" என்று கூறியிருந்தார். அதேபோல ரஷ்யா-உக்ரைன் போர் சாமானியர்களையும், பெண்களையும், குழந்தைகளையும்தான் அதிகம் பாதிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஏற்கெனவே காலநிலை மாற்றம் காரணமாக பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், தற்போது அதனை குறைக்க வேண்டிய அவசியம் குறித்து குட்டரெட் வலியுறுத்தி இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

English summary
UN Secretary General António Guterres has warned that if we don't reduce the gap between the rich and the poor, the world will lose balance as the world's population soon reaches 8 billion. Guterres made the keynote address at the UN Climate Change Conference (COP27) in Egypt. He emphasized that if the world is to be for all, we must do this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X