ஈரான் மீது தரை வழி போர்.. அமெரிக்கா எடுத்த முக்கிய மூவ்! அம்பலப்படுத்திய சீனா!
பெய்ஜிங்: ஈரான் மீது ஏற்கெனவே அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் தரைவழி போருக்கும் அமெரிக்கா ரெடியாகி வருகிறது. இதற்காக மிக முக்கியமான போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா, ஈரான் நோக்கி திருப்பியிருக்கிறது.
அமெரிக்காவின் சக்தி வாய்ந்த போர் கப்பல்கள், ஈரான் நோக்கி திருப்பப்படுவதை செயற்கைக்கோள் மூலம் சீனா தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்து வருகிறது. தற்போது 'USS திரிப்போலி' கப்பல் ஒன்று வளைகுடா பகுதியை நோக்கி பயணித்து வருவதை சீன செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்திருக்கின்றன.

போர் கப்பல்கள்
இந்த கப்பல் சாதாரண கப்பல் கிடையாது. இருப்பதிலேயே அதிநவீன போர் கப்பல். மற்ற போர் கப்பல்களை போல, கடலில் மட்டும் சண்டை செய்யாது. மாறாக தரைவழி தாக்குதல் நடத்த இது பயன்படுத்தப்படுகிறது. இதன் பின்பகுதி கடலுடன் இணைக்கப்பட்டிருக்கும். அப்படியெனில், கரைக்கு நெருக்கமாக வந்து, பீரங்கி உள்ளிட்ட வாகனங்களையும், வீரர்களையும் நிலப்பரப்புக்குள் அனுப்பும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஹெலிகாப்டர்களும், போர் விமானங்களும் இருக்கின்றன.
மும்முனை தாக்குதல்
இவற்றின் மூலம் தரை, கடல் மற்றும் வான் என மூன்று வழிகளிலும் இந்த கப்பல் தாக்குதலை நடத்தும். இந்த கப்பல் ஒரு பகுதிக்கு வருகிறது எனில், அந்த பகுதியில் நிச்சயம் தரைவழி தாக்குதல் நடத்தப்படும் என்று அர்த்தம். கப்பலில் சுமார் 1000-2000 வீரர்கள் வரை தங்கியிருப்பார்கள். ஒரு மினி ராணுவ முகாமையே இந்த கப்பல் தனக்குள் வைத்திருக்கிறது.
சிறப்பு படை
இதில் உள்ள ராணுவ வீரர்கள் தனி சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். அதிரடியான தாக்குதலுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் வழக்கமாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்தான் இருப்பார்கள். தற்போது இவர்கள் வளைகுடா பகுதிக்கு மாற்றப்பட்டிருப்பது, அங்கு மிகப்பெரிய அளவில் தரைவழி தாக்குதல் நடத்தப்படுகிறது என்று அர்த்தம். 'USS திரிப்போலி' கப்பல், வளைகுடா நோக்கி நகர்ந்து வருவதை சீனாவின் தனியார் செயற்கைக்கோள்கள் உறுதி செய்திருக்கின்றன.
போரின் போக்கு
ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் 3வது வாரத்தை எட்டியிருக்கிறது. இதுவரை நடத்தப்பட்ட அட்டாக்கில், ஈரான் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டிருக்கிறார். எனவே, இந்த போரை ஈரான் லேசில் விடுவதாக இல்லை. பதில் தாக்குதலில் அமெரிக்க படைகளை மொத்தமாக காலி செய்ய முடியவில்லை என்றாலும், கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. பல லட்சம் கோடிகளை போருக்காக செலவிட்டிருக்கிறது. மறுபுறம் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விலையும் அதிகரித்திருக்கிறது.
இப்படி இருக்கையில், அமெரிக்கா முடிந்த அளவுக்கு சீக்கிரமாக இந்த போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. எனவேதான் தரைவழி தாக்குதலுக்கு ரெடியாகியிருக்கிறது. ஏற்கெனவே ஈரான் கடல் பகுதியில் யுஎஸ்எஸ் ஜெரால்டு போர்டு மற்றும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
முடங்கும் அமேசான் சேவைகள்? ஈரான் சரமாரி ‘அட்டாக்’.. பற்றி எரியும் பஹ்ரைனால் டிரம்புக்கு பிரஷர் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு!












Click it and Unblock the Notifications