வெடித்தது போர்? அமெரிக்க போர்க்கப்பலை நெருங்கிய ஈரானின் ட்ரோன்! அரபிக்கடலில் மோதல் - பதற்றம்
டெஹ்ரான்: ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானை அமெரிக்காவின் போர்கப்பல்கள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் தான் அரபிக்கடலில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலை ஈரானின் ட்ரோன் நெருங்கியது. இதனை கவனித்த அமெரிக்க வீரர்கள் விமானம் தாங்கி போர்க்கப்பலில் இருந்து உடனடியாக எஃப் 35சி ரக போர் விமானத்தை அனுப்பி அதனை சுட்டு வீழ்த்தினர். இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பிரச்சனை போய் கொண்டிருக்கிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே தான் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதன்பிறகு பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

டிரம்ப் எச்சரிக்கை
தற்போது மீண்டும் இந்த விவகாரத்தை டொனால்ட் டிரம்ப் கையில் எடுத்துள்ளார். அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தையை நடத்தி ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா ஏராளமான போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் குவித்துள்ளது. இவை அனைத்தும் ஈரானை குறிவைத்து ஆங்காங்கே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
நாசக்கார போர்க்கப்பல்
அந்த வகையில் அரபிக்கடலில் அமெரிக்காவின் நாசக்கார போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பல் வலம் வருகிறது. இந்த கடந்த மாதம் ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்
இந்த போராட்டத்தை தொடர்ந்து ஈரானை இந்த கப்பல் சுத்துப்போட்டது. இதனால் அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் ஈரானை தாக்கலாம் என்ற நிலை உருவாகி பதற்றம் தொடர்ந்து வருகிறது.
நெருங்கி சென்ற ஈரான் ட்ரோன்
இந்த ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தனது டிராண்ஸ்பாண்டரை ஆஃப் செய்து செயல்பட்டு வருகிறது. இதனால் கப்பலின் இருப்பிடத்தை ஈரானால் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் ஈரான் நவீன ட்ரோன்களை பயன்படுத்தி கப்பலை தேடும் பணியை மேற்கொண்டது.
வீழ்த்தப்பட்ட ட்ரோன்
அந்தவகையில் அரபிக்கடலில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலை ஈரானின் அதிநவீன ட்ரோன் கண்டுபிடித்தது. அந்த ட்ரோன் கப்பலை திடீரென்று நெருங்கிய நிலையில் அது அமெரிக்க படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் ஈரானின் ஷாஹெட் -139 ரகத்தை சேர்ந்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா தந்த விளக்கம்
இதனை அமெரிக்காவின் மத்திய கமாண்ட் படை பிரிவின் செய்தி தொடர்பாளரும், கடற்படையின் கேப்டனுமான டிம் ஹாக்கின்ஸ் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛வீரர்களின் தற்காப்பிற்காக ஆபிரகாம் லிங்கம் கப்பலை நெருங்கிய ஈரானின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்ட்டுள்ளது.
இதில் அமெரிக்க வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எந்த உபகரணமும் சேதமடையவில்லை. பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கப்பல் மற்றும் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே எஃப் 35 சி போர் விமானம் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியது'' என்று கூறியுள்ளார்.
அதிகரித்த பதற்றம்
இதுபற்றி ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம், ‛‛அரபிக்கடலின் சர்வதேச கடற்பரப்பில் பறந்து கொண்டிருந்த ட்ரோனின் தொடர்பு துண்டிக்கப்ட்டுள்ளது. அதன் பின்னணி தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் அந்த ட்ரோன் தனது கண்காணிப்பு பணியை முடித்துவிட்டது'' என்று கூறியுள்ளது.
அமெரிக்கா தரப்போ தங்களின் தற்காப்புக்காக ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள நிலையில் ஈரான் செய்தி நிறுவனங்கள் ட்ரோன் மாயமாகி உள்ளதாக கூறியுள்ளது. இரண்டும் வெவ்வேறு தகவல்களை கூறியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் பதற்றம் தொற்றி கொண்டுள்ளது.
அமெரிக்க கப்பலை சுத்துப்போட்ட ஈரான்
இது ஒருபுறம் இருக்க அடுத்த சில மணிநேரத்தில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஈரானுக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தி மிகவும் முக்கியமான இடமாகும். இந்த பாதையின் வழியாக தான் ஏராளமான வணிக கப்பல்கள் தினமும் சென்று வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் கொடியுடன் ‛எம்/வி ஸ்டெனா இம்பரேட்டிவ்' என்ற வணிக கப்பல் சென்றது. அப்போது ஈரானுக்கு சொந்தமான படகுகள் அந்த கப்பலை பறிமுதல் செய்யும் வகையில் நெருங்கி உள்ளன. இருப்பினும் அது சாத்தியமாகவில்லை.
இதனையும் அமெரிக்காவின் கடற்படை கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛2 ஐஆர்ஜிசி படகுகளும், ஒரு ஈரானிய மொஹாஜெர் ட்ரோனும் வேகமாக கப்பலை நெருங்கி அதனைக் கைப்பற்றும் வகையில் அச்சுறுத்தின'' என்று கூறியுள்ளார். இப்படி ஒரே நாளில் ஈரானை சுற்றிய கடல்பகுதியில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இது இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
-
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications