For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகளவில் கொரோனா உயிரிழப்பு குறைவு.. குட் நியூஸ் சொன்ன உலக சுகாதார அமைப்பின் தலைவர்!

Google Oneindia Tamil News

ஜெனிவா: உலகளவில் வாராந்திர கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.

பழனி அருகே கணவனை அடித்து கொன்ற மனைவி.. மைத்துனர் உள்பட 3 பேர் கைது பழனி அருகே கணவனை அடித்து கொன்ற மனைவி.. மைத்துனர் உள்பட 3 பேர் கைது

உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா இன்னும் அச்சுருத்தி வருகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா குறைந்து இருந்தாலும் அமெரிக்கா, இங்கிலாந்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரோனா உயிரிழப்பு குறைவு

கொரோனா உயிரிழப்பு குறைவு

அதே வேளையில் கொரோனா உயிரிழப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 3,162 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 151,148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வாராந்திர ஆய்வு குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறியதாவது:- உலகளவில் வாராந்திர கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலகளவில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசி மிக முக்கியம்

தடுப்பூசி மிக முக்கியம்

கடந்த ஓர் ஆண்டில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பாகும். இது பல்வேறு நாடுகள் அளித்த கணக்காகும். ஆனால் இதை விட இறப்புகள் அதிகமாக இருக்கலாம். ஐரோப்பாவைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் இறப்பு குறைந்து வருகிறது. பல நாடுகள் புதிதாக கொரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தும் நாடுகளில் இறப்பு அதிகமாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி மிக முக்கியம் என்று டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் அதிகம்

அமெரிக்காவில் அதிகம்

உலகளவில் மொத்தம் 240,062,436 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 4,891,946 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 217,386,092 பேர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் அதிகமாக அமெரிக்காவில் 45,547,920 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக இந்தியாவில் 34,020,730 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுளள்து.

இந்தியாவில் எப்படி?

இந்தியாவில் எப்படி?

தற்போது அதிகபட்சமாக அமெரிக்காவில் 50,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இந்தியாவில் 20,000-க்குள் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு கூறியபடி கொரோனா தடுப்பூசி விரைவாக போட்டதால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The number of weekly corona virus deaths worldwide continues to decline, said Adhanom Gebreyesus , president of the World Health Organization
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X