For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவீடன் கடலில் சுற்றித்திரிந்த மர்ம “நீர்மூழ்கிக் கப்பல்” – தேடுதல் வேட்டையில் கடற்படை!

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: சுவீடன் அருகில் கடல் பகுதியில் மர்ம நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று சுற்றித் திரிந்ததை அடுத்து அந்நாட்டு கடற்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

இந்த நிலையில் சுவீடன் அருகே ரஷ்ய நாட்டின் கடல் பகுதிக்குள் மர்ம நீர்மூழ்கி கப்பல் ஒன்று சுற்றி திரிந்ததை சுவீடன் ராணுவம் கண்டுபிடித்தது.

தீவிர தேடுதல் வேட்டை:

தீவிர தேடுதல் வேட்டை:

இதையடுத்து அந்த நீர்மூழ்கி கப்பலை பிடிப்பதற்காக சுவீடன் கடற்படை மற்றும் விமான படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

ஹெலிகாப்டர் மூலமாக தேடுதல்:

ஹெலிகாப்டர் மூலமாக தேடுதல்:

மின்னல் வேகப்படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் பல இடங்களில் தேடினார்கள். ஆனால் கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை.

கப்பல் பற்றிய குழப்பம்:

கப்பல் பற்றிய குழப்பம்:

இது ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பலாக இருக்கும் என்று சுவீடன் தெரிவித்துள்ளது. ஆனால் இதை ரஷ்யா உடனடியாக மறுத்துள்ளது. அது நெதர்லாந்து நாட்டு கப்பலாக இருக்கும் என்று ரஷ்யா கூறியது. ஆனால் நெதர்லாந்தும் தங்கள் நாட்டு கப்பல் எதுவும் அங்கு செல்லவில்லை என்று கூறியிருக்கிறது.

அடித்துச் சொல்லும் சுவீடன்:

அடித்துச் சொல்லும் சுவீடன்:

அது ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பலாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. சுவீடனை உளவு பார்ப்பதற்காக நவீன கருவிகளை கடல் பகுதிக்குள் மறைத்து வைப்பதற்காக ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் அங்கு வந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

English summary
Sweden's armed forces say they are looking for a submarine spotted in the country's waters not far from Stockholm and speculation has centred on Russia. But the Russians have scoffed at the claims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X