வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2022-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு: பெலராஸ் வழக்கறிஞர் உள்பட உக்ரைன், ரஷிய அமைப்புக்கும் அறிவிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 2022-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ் என்பவருக்கும், ரஷியா மற்றும் உக்ரைனின் மனித உரிமை அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளில் சர்வதேச அளவில் அளப்பறிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது.

ஆன்னி எர்னாக்ஸ்..82வயதில் நோபல் பரிசு..பிரெஞ்சு தேசத்தின்மீது பூவெறிகிறேன்.. வைரமுத்து ஆன்னி எர்னாக்ஸ்..82வயதில் நோபல் பரிசு..பிரெஞ்சு தேசத்தின்மீது பூவெறிகிறேன்.. வைரமுத்து

அமைதிக்கான நோபல் பரிசு

அமைதிக்கான நோபல் பரிசு

அந்த வகையில் நடப்பு 2022-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2 அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பெலாரசை சேர்ந்த வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உரிமைக்காக போராடியதற்காக

மக்களின் உரிமைக்காக போராடியதற்காக

அதேபோல், ரஷ்யாவின் மெமோரியல் என்ற மனித உரிமை அமைப்புக்கும் உக்ரைனின் சிவில் லிபர்டி என்ற மனித உரிமை அமைப்புக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் மருத்துவத்துறைக்கு

முதலில் மருத்துவத்துறைக்கு

கடந்த திங்கட்கிழமை முதல் நடப்பு 2022-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளான திங்கட்கிழமை மருத்துவத்துறைக்கு அளிக்கப்பட்டது. இதில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மரபியல் நிபுணரான ஸ்வாண்டே பாபோவுக்கு மருத்துவத்துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. நவீன மனிதர்களின் அழிந்துபோன உறவினராக கருதப்படும் நியாண்டர்டாலின் மரபணுவை வெற்றிகரமாக வரிசைப்படுத்தியதற்காக ஸ்வான்டே பாபோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

 இயற்பியல்

இயற்பியல்

தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அலைன் ஆஸ்பெக்ட் (பிரான்ஸ்), ஜான் எப் கிளாசர் (அமெரிக்கா), ஆண்டன் ஜீலிங்கர் (ஆஸ்திரியா) ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது.

வேதியலுக்கான நோபல்

வேதியலுக்கான நோபல்

அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் வேதியிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் கரோலின் பெர்டோசி, டென்மார்க்கின் மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவின் பேரி ஷார்ப்லெஸ் அகிய 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு

L Occupation என்ற நூலை எழுதியதற்காக ஆனி எர்னாக்ஸூக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பாலின பாகுபாட்டிற்கு எதிரான கருத்துக்களை தைரியமாக பதிவு செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து உண்மைகளை உடைத்து எழுதக்கூடிய எழுத்தாளராக ஆனி எர்னாக்ஸ் அறியப்பட்டு வருகிறார்.

English summary
The 2022 Nobel Peace Prize has been awarded to Belarusian lawyer Alas Bialiats and human rights organizations from Russia and Ukraine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X