யார் இந்த முல்லா முகமது ஹசன்.. ஆப்கானிஸ்தான் அரசின் புதிய தலைவர்.. பின்னணி
காபூல்: ஆப்கானிஸ்தான் அரசின் புதிய இடைக்கால தலைவராக பொறுப்பேற்க உள்ள முல்லா முகமது ஹசன் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை நடந்த தாலிபன்கள் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் இருந்தவர் தான் முல்லா முகமது ஹசன்.
Recommended Video
முல்லா முகமது ஹசன் அகுந்த் தான் தற்போது தாலிபன்கள் இயக்கத்தில் உள்ள ரெஹ்பரி ஷுரா என்ற சக்திவாய்ந்த முடிவெடுக்கும் அமைப்பின் தலைவராக உள்ளார். ரெஹ்பரி ஷுரா (தலைமை கவுன்சில்) குழு தான் அனைத்து விவகாரங்களையும் நடத்தும் அரசாங்க அமைச்சரவை போல செயல்படுகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் புதிய அரசாங்கத்தின் இடைக்கால தலைவராக முல்லா ஹாசனின் பெயரை தாலிபன்கள் இயக்க குழுவின் முன்னணி தலைவராக முல்லா ஹெபத்துல்லா இன்று முன்மொழிந்தார்.

சக்தி வாய்ந்த குழு
முல்லா முகமது ஹசன் பற்றி ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி பார்ப்போம். முல்லா ஹாசன் தாலிபன்கள் இயக்கத்தின் பிறப்பிடமான கந்தஹாரைச் சேர்ந்தவர் ஆவார். தாலிபன் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். அவர் தாலிபன்கள் இயக்கத்தை வழிநடத்தும் ரெஹ்பரி ஷூராவின் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். முல்லா ஹெபத்துல்லாவுக்கு நெருக்கமாகவும் இருந்தவர் ஆவார்.

யார் இவர்
1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் முந்தைய அரசாங்கத்தின் போது அவர் வெளியுறவு அமைச்சர் மற்றும் துணை பிரதமராக பணியாற்றி உள்ளார் முல்லா முகமது ஹசன் அகுந்த். அதனால் தான் இவரை தாலிபன்கள் புதிய இடைக்கால தலைவராக தேர்வு செய்துள்ளனர்.

புத்தர் சிலை அழிப்பு
தாலிபான்கள் நடத்திய கடந்த ஆட்சியில் ஒரு குறுகிய கால இடைவெளியை நிறுத்துவதைத் தவிர வேறு எந்த முக்கிய பதவிகளும் முல்லா ஹசனுக்கு வழங்கப்படவில்லை. இவர் தலைமையில் தான் மார்ச் 2001 இல் பாமியன் புத்தர் சிலைகள் அழிக்கப்பட்டன, ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக இன்னும் பட்டியலிடப்பட்டுள்ள நபர் தான் முல்லா முகமது ஹசன்.

அமைச்சர்கள்
இதனிடையே தாலிபன்கள் அமைப்பின் துணை தலைவர் அப்துல் கனி ஆப்கானிஸ்தான் அரசின் துணை தலைவராக (துணை பிரதமர்) பொறுப்பேற்க உள்ளார். முல்லா பரதர் அகுந்த் மற்றும் முல்லா அப்துல் சலாம் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது துணை பிரதமர்களாக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சராக சிராஜூதின் ஹக்கானி, வெளியுறவு அமைச்சராக ஆமீர் கான் முத்தாகி. ஆப்கான் இடைக்கால அரசின் துணை வெளியுறவு அமைச்சராக ஷேர் முகமது அப்பாஸ் துணை வெளியுறவு அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் (இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்), ஆப்கான் இடைக்கால அரசின் பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாகூப் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications