For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபஞ்ச அழகியாக தேர்வான பிலிப்பைன்ஸ் அழகி: முதல் 15ல் கூட வராத இந்தியா

By Siva
Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்சல்ஸ்: 2015ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸை சேர்ந்த பியா ஆலோன்சோ உர்ட்பாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக தவறாக வேறு ஒருவருக்கு பிரபஞ்ச அழகி கிரீடம் சூட்டப்பட்டது.

2015ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் இந்தியா உள்பட 80 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாலிவுட் நடிகை ஊர்வசி ராதெலா கலந்து கொண்டார்.

பல்வேறு சுற்றுகளில் அழகிகள் கலந்து கொண்டு அசத்தினர்.

ஊர்வசி

ஊர்வசி

15 வயதில் இருந்து இந்தியாவில் நடந்த பல்வேறு அழகிப் போட்டிகளில் பட்டம் வென்ற ஊர்வசியால் பிரபஞ்ச அழகிப் போட்டியில் முதல் 15 இடங்களுக்குள் கூட வர முடியவில்லை.

பிலிப்பைன்ஸ்

இறுதிச் சுற்றில் கலந்து கொண்டவர்களில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பியா ஆலோன்சோ உர்ட்பாக் பிரபஞ்ச அழகியாக தேர்வானார். ஆனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் ஸ்டீவ் ஹார்வே பியாவின் பெயருக்கு பதிலாக கொலம்பியா அழகி அரியாத்னா குடியரஸ் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டதாக தவறாக அறிவித்தார்.

மகுடம்

ஹார்வே தவறாக அறிவித்ததை அடுத்து கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்ற கொலம்பியாவின் பாலினா வேகா மகுடத்தை அரியாத்னாவுக்கு சூட்டினார்.

சாரி

சாரி

மகுடம் சூட்டப்பட்ட பிறகு தான் ஹார்வே தனது தவறை உணர்ந்து தவறுதாக அரியாத்னாவின் பெயரை அறிவித்துவிட்டதாக தெரிவித்தார்.

பறித்து சூட்டல்

ஹார்வே செய்த தவறை அடுத்து பாலினா அரியாத்னாவின் தலையில் அணிவித்த மகுடத்தை எடுத்து பியாவின் தலையில் சூட்டி வாழ்த்து தெரிவித்தார். ஹார்வேவின் செயலை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

English summary
After goof up, Miss Philippines Pia Alonzo Wurtzbach won the coveted Miss Universe title. Indian beauty Urvashi was not able to make it to top 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X