கணவனை வெட்டிக் கொன்றுவிட்டேன்.. போலீஸ் ஸ்டேசனுக்கு நேராக போன ரஷியா.. மிரண்ட காஞ்சிபுரம் போலீஸ்
காஞ்சிபுரம் : குடும்ப பிரச்சனை காரணமாக குடிபோதையில் தகராறு செய்த கணவனை காஞ்சிபுரத்தில் மனைவி வெட்டிக் கெலை செய்தார். கொலை செய்த பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரிய காஞ்சிபுரம் மளிகை தெருவைச் சேர்ந்தவர் நவ்ஷாத், ஆட்டோ ஓட்டுநரான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் ரேவதி என்ற இந்துப் பெண்ணை காதலித்து, மதம் மாற்றி ரஷியா என பெயர் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு ஒரு மகள், மகன் என இரு குழந்தைகள் உள்ளனர்.
நவ்ஷத் சொந்தமாக ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் ஆட்டோ தொழில் சரிவர நடைபெறாத காரணத்தால் வருமானம் குறைந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு நடைபெற்று வந்துள்ளது.

குடித்துவிட்டு தகராறு
இதன் காரணமாக நவ்ஷாத் குடிபோதைக்கு அடிமையாகி மனைவி ரஷியாவுடன் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவு குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

காஞ்சிபுரம் காவல் நிலையம்
தகராறு முற்றிய நிலையில் கடும் கோபமடைந்த மனைவி ரஷியா அருகில் இருந்த கத்தியை எடுத்து கணவனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த ரஷியா சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு தானே சென்று சரணடைந்துள்ளார்.

விசாரணை
கொலை சம்பவம் குறித்து அறிந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட நவ்ஷாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுபோதை காரணம்
கொலை சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தானாக வந்து சரணடைந்த ரஷியாவை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சினைக்காக நடந்த கொலையால் இரு குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கிறது. மதுபோதை காரணமாக சண்டை ஏற்பட்டு அது கொலையில் முடிந்துள்ளது. பெற்ற பிள்ளைகள் இப்போது தாய் தந்தை இருவரையும் பிரிந்து தவிக்கின்றன.

எப்படி சாத்தியம்
இந்நிலையில் நவ்ஷத் குடும்பத்தினர், இந்தக் கொலையை ரஷியா மட்டும் செய்திருக்க முடியாது,வேறு யாரோ உடனிருந்து செய்துள்ளனர் என சந்தேகத்தை எழுப்பியுள்ளதால் சிவகாஞ்சி போலீசார் கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications