ஜாதிக்கொரு சுடுகாடு தான் திராவிட மாடலா? வெட்கமாக இல்லையா? வெளுத்து வாங்கிய இணை அமைச்சர் எல்.முருகன்!
கன்னியாகுமரி : ஜாதிக்கொரு சுடுகாடு வைத்து கொள்வது தான் திராவிட மாடலா? உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் நரேந்திர மோடி தான் எனவும், வெட்கம் இல்லாமல் எதை திராவிட மாடல் என்று திமுக கூறுகிறார்கள் என்று தெரியவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் தென் தமிழகத்தில் பாஜக சிறுபான்மைப்பிரிவு மாநில செயலாளர் சதீஷ்ராஜாவின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான எல்.முருகன் கலந்து கொண்டு நிர்வாகி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து கூறினார்.

எல்.முருகன் பேட்டி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் திராவிட மாடல் என்பது என்ன என்று திமுக விளக்க வேண்டும். 50, 60 ஆண்டுகளாக திராவிட மாடலில் தான் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் இன்றும் பல கோவில்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. பல கிராமங்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை இது தான் திராவிட மாடலா?

ஜாதிக்கொரு சுடுகாடு
ஜாதிக்கொரு சுடுகாடு வைத்து கொள்வது தான் திராவிட மாடலா? உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் நரேந்திர மோடி தான். வெட்கம் இல்லாமல் எதை திராவிட மாடல் என்று திமுக கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மீனவர் படுகொலை நடைபெற்றது.

600 துப்பாக்கிச்சூடு
600க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒரு துப்பாக்கி சூடு கூட நடக்கவில்லை. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளது மத்திய அரசு. 2014 க்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மின்மிகை மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் சரியான பராமரிப்பு இல்லாமலும், நிர்வாக சீர்கேடு காரணமாகவும் மின் வெட்டு உள்ளது.

பொருளாதாரத்தில் கீழ்நிலை
பொருளாதாரத்தில் கீழ்நிலையில் சென்றுள்ளது தமிழக அரசு, அதனை மக்கள் தலையில் சுமத்திவிட்டு, மத்திய அரசு மீது பழி போடுவதை ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார் "என பேசினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் C.T. ரவி, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications