கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த ரூம் பூட்டியிருக்கு.. ஏசி ஓடுதே எப்படி, சர்வர் வேற ஆன்ல இருக்கு.. பகீரை கிளப்பிய செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி கரூர் தொகுதி வாக்கு மையத்தை குறித்த ஒரு சந்தேகத்தை கிளப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

கரூர்: "அந்த ரூம் பூட்டியிருக்கு.. ஆனால் ஏசி ஒர்க் ஆகுது.. சர்வர் ஆன்ல இருக்குன்னா என்ன அர்த்தம்?" என்று அரவக்குறிச்சியில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையம் குறித்து திமுக கரூர் வேட்பாளர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.. அத்துடன், கரூர் தொகுதியில் 28 மேசைகளை பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் செந்தில்பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அனைத்து வாக்குப்பதிவு மிஷின்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.. அவைகளுக்கு பலமான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே கட்டுப்பாடுகளற்ற விமான பயணம் இன்று தொடங்கியது! ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே கட்டுப்பாடுகளற்ற விமான பயணம் இன்று தொடங்கியது!

எனினும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில், வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் குறித்த புகார்கள் எழுந்து வருகின்றன.. இந்த புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அந்த வகையில், கரூத் தொகுதி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்... கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன...

 ரூமில் ஏசி

ரூமில் ஏசி

3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.. 24 மணி நேர சிசிடிவி கேமராவும் இருக்கிறது.. இதைதவிர, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி முகவர்கள் கண்கொத்தி பாம்பாக அங்கேயே விழிப்புடன் இருந்து வருகின்றனர்.. இந்நிலையில், இந்த காலேஜ் வளாகத்தில் ஒரு பூட்டப்பட்ட ரூமில், நேற்று ஏசி இயங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. சர்வர்களும் செயல்பாட்டில் இருந்துள்ளதாம்..

விளக்கம்

விளக்கம்


இதை பார்த்து சந்தேகமடைந்த திமுகவினர் உடனடியாக மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பிரசாந்த் மு. வடநேரேவுக்கும் தகவல் அளித்தனர்.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வும் விசாரணையும் நடத்தப்பட்டது. அப்போது, காலேஜில் கிளாஸ்கள் முடிந்து கிளம்பி செல்லும்போது, ஏசியை ஆப் பண்ணாமல் போய்விட்டதாகவும், அதேபோல சர்வரையும் அணைக்காமல் விட்டுவிட்டதாகவும் காலேஜி நிர்வாகம் சார்பில் விளக்கம் தரப்பட்டது.. எனினும், இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது.

 செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இந்நிலையில், இந்த விஷயம் செந்தில்பாலாஜிக்கு தெரிவிக்கப்பட்டது.. தகவல் அறிந்த அவர், உடனடியாக இந்த மையத்துக்கு வந்து ஆய்வு நடத்தினார்... பிறகு செய்தியாளர்களிடம் செந்தில்பாலாஜி சொல்லும்போது, "காலேஜி 2 நாள் லீவு.. எல்லா ரூமும் பூட்டியிருக்கு.. ஆனால், பூட்டப்பட்ட ரூமில் ஏசி ஓடுது.. சர்வர்கள் ஆன் ஆகி இருக்கு.. எப்படி? இயக்கத்தில் இதைபற்றி விளக்கம் தந்தார்கள்.. ஆனால் திருப்தியா இல்லை. வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறைகள் உள்ள வளாகத்தில், லேப்டாப், வைஃபை, கம்ப்யூட்டர் பாகங்கள் கொண்டு வருவதற்கும் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதிக்கவேண்டும்...

 நள்ளிரவு

நள்ளிரவு

இந்த தொகுதியில் மொத்தம் 355 வாக்கு சாவடிகள் இருக்கின்றன.. ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியவே எப்படியும் 45 நிமிஷமாகும்.. அப்படி பார்த்தால் 77 வாக்குசாவடிகளுக்கும் எண்ணி முடிக்க நடுராத்திரி ஆகிவிடும்.. அதனால், 28 மேசைகளை போட்டு வாக்கு எண்ணிக்கையை விரைவாக நடத்தவேண்டும். இதுகுறித்து ஆட்சியரிடமும் தெரிவித்துள்ளோம்" என்றார்.

English summary
DMK Senthil Balaji and asks why AC in a locked room accelerate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X