படிச்சு படிச்சு சொன்னோமே.. கேட்கலையே.. தேம்பி தேம்பி அழுத அன்பில் மகேஷ்.. கலங்கிய செந்தில் பாலாஜி
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கரூர் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் உறவினர்களின் கண்ணீர், காயமடைந்தவர்களின் துடிப்பு என்று கரூர் மருத்துவமனை நிலவரம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் முகாமிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சி, அரியலூர், நாகைப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அவர் ஏற்கனவே பிரச்சாரம் செய்துவிட்டார். இன்று அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திட்டமிட்ட நேரத்தை விட சற்று கால தாமதமாக விஜய் சென்றதாக புகார் எழுந்தது.

தவெக கூட்ட நெரிசல்
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை விஜய் கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை என்ற அந்தக் கட்சியினர் புகார் தெரிவித்தனர். கரூர் விஜய் கூட்டத்திற்கு சுமார் 10,000 பேர் வருவார்கள் என்று தவெகவினர் கூறியிருந்தனர். ஆனால் அதிகளவு கூட்டம் கூடியது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 38 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை, சேலத்தில் இருந்து மருத்துவக் குழுவினர் கரூர் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணீரில் கரூர்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்னும் சிறிது நேரத்தில் கரூர் செல்லவுள்ளார். அமைச்சர்கள் பலரும் கரூரில் முகாமிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் கரூரில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து பணிகளை ண்காணித்து வருகிறார்கள்.
கரூர் மருத்துவமனையில் திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உறவுகளின் கண்ணீர் நெஞ்சை உலுக்கி வருகிறது. ஒவ்வொருவரின் கண்ணீரின் பின்னணியிலும் ஆழமான சோகம் மறைந்துள்ளது. அதை காணும் யாராக இருந்தாலும் மனம் கடுமையாக பாதிக்கப்படும். நிவாரணப் பணியில் இருப்போரும் மிகுந்த வேதனையுடன் பணியில் செய்து வருகிறார்கள்.
அன்பில் மகேஸ் வேதனை
இந்நிலையில் உயிரிழந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு அவர்களின் சோகம், கண்ணீரை பார்த்து அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜி மிகுந்த சோகத்துடன் காணப்படுகிறார்கள். அப்போது அன்பில் மகேஸ், "படிச்சு படிச்சு சொன்னேன் கண்டிஷனை பாலோ பண்ணுங்கனு கேட்டீங்களா." என்று கண்ணீர் விட்டு அழுதபடி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவரின் அருகிலேயே செந்தில் பாலாஜியும் கண் கலங்கிய படி சோகமாக நிற்கிறார். அன்பில் மகேஸ் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications