2024 லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபைத் தேர்தல் வரும்... திமுகவுக்கு சிக்கலா? - ஓபிஎஸ் ஆருடம்
திமுக ஆட்சியில் எந்த திட்டமும் வரவில்லை. இதே நிலை நீடித்தால் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு இருக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
கரூர்: திமுக ஆட்சியில் எந்த திட்டமும் வரவில்லை. இதே நிலை நீடித்தால் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளதாகவும் ஓபிஎஸ் ஆருடம் கூறியுள்ளார். பொங்கல் தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ஊழல் நடந்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி மாநிலம் முழுவதும் நேரடித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேயர்கள், நகராட்சிக் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மறைமுகத்தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
வேட்புமனு தாக்கல் முடிந்து விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் புகழூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், திமுக அரசை கடுமையாக குற்றம் சாட்டினார்.

நீட் தேர்வு ரகசியம் என்ன?
கொரனோ தொற்று கால கட்டத்தில் முழுவதுமாக கட்டுப்படுத்தும் முதல் மாநிலமாக நம் மாநிலம் இருந்தது. கடந்த 2021 ஆண்டில் திமுக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விட்டனர். நீட் தேர்வு ஒழிப்பு தான் முதல் கையெழுத்து என்றார்கள். நடைபெற்றதா? நேற்று வந்த உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாக பேசிய இறுதி வரை சட்டப்போராட்டம் நடத்துவது தான் ரகசியம் என்று பேசினாராம்.

பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஊழல்
பொங்கல் பரிசு தொகுப்பை பார்த்து நாடே சிரிக்கிறது என்றார். அரிசியை பிரித்தாலே நாற்றம் அடிக்கிறது. வெல்லம் உருகி வழிகிறது என்று சொன்னார். அரிசியை மாட்டுக்கு கொடுத்தால் முறைத்து பார்க்கிறது. பொங்கல் தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ஊழல் நடந்துள்ளது.

2024ல் சட்டசபைத் தேர்தல்
அம்மாவிற்கும், எம்ஜிஆருக்கும் துரோகம் செய்த அனைவரும், அதன் பலனை அனுபவிப்பார்கள் என்று சாபம் விட்டார் ஒபிஎஸ். கடந்த 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி தந்தது அதிமுக ஆட்சி தான். திமுக ஆட்சியில் எந்த திட்டமும் வரவில்லை. இதே நிலை நீடித்தால் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளதாக ஆருடம் கூறினார்.

திமுக படுதோல்வி
இந்த தேர்தல் தொண்டர்கள் நிற்கும் தேர்தல். தொண்டர்கள் தான் வார்டு உறுப்பினர்களாக இருக்கும் தேர்தல். அவர்கள் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும். அவர்களை மகத்தான வெற்றியை பெற வைக்க வேண்டும். எனக்குப் பின்னாலும் பல நூறு ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருக்கும் என்றார் அம்மா. மீண்டும் அதிமுக தான் ஆட்சி கட்டிலில் அமரும். உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வி அடைய வேண்டும் என்றும் கெட்டுக்கொண்டார். நம்மை நம்பி இருக்கின்ற வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டார்.

நிரந்தர திமுக ஆட்சி
தமிழகத்தில் திமுகதான் நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என ஓபிஎஸ் கூறியிருக்கிறார். இந்த வார்த்தைப்போர் இன்னும் என்னென்ன விவாதங்களை கொண்டு வரப்போகிறது என்று பார்க்கலாம்.
-
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
கட்சிக்காரங்கள விட்ருங்க..கல்யாண வீட்டுக்காரங்கள புடிங்க! தேர்தல் சீசனில் முகூர்த்தம்! பாவம் மக்கள்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
போடு..அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! காலையில் வந்த ஹேப்பி நியூஸ்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications