கிருஷ்ணகிரி அரசு பஸ்ஸில் யார் பாருங்க.. நொடியில் தடுமாறி விழிக்கும் ஆண்கள்.. ஹய்யோ ஊத்தங்கரை பெண்கள்

Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான திருட்டு சம்பவங்கள் பெருகி வருகின்றன.. ஓடும் அரசு பஸ்ஸில், அரசு மருத்துவமனையில் என பொது இடங்களில் இந்த திருட்டு சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டபோது, கடந்த 2 நாட்களில் இந்த திருட்டு சம்பவங்களில் சிக்கியிருப்பது பெரும்பாலும் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. என்ன நடந்தது?
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ளது கீழாந்துார் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்மாள்.. 60 வயதான இவர், மூச்சு திணறல் காரணமாக திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சமீபத்தில் சிகிச்சை பெற்றார்.. அப்போது சுந்தரம்மாள், தூங்கி கொண்டிருந்தபோது, பெண் ஒருவர், அவர் அணிந்திருந்த ஒரு சவரன் தாலி செயினை திருடி சென்றார்.
Krishnagiri Government Bus uthangarai
அரசு மருத்துவமனை
இதுகுறித்த புகார்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்ததுடன், மருத்துவமனையில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும் ஆய்வு செய்யப்பட்டது.. அப்போதுதான், திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் மோட்டூர் பகுதி சேர்ந்த அம்பிகா என்ற 27 வயது நகையை திருடியது அம்பலமானது. இப்போது அம்பிகா கைதாகி, அவரிடமிருந்து நகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே மிதிலைகுளத்தை சேர்ந்த முருகேஸ்வரி என்பவர், வங்கியில் அடமானம் வைத்திருந்த தன்னுடைய நகையை மீட்டு, அருப்புக்கோட்டையிலிருந்து மே 9ம் தேதி பஸ்ஸில் ஏறி ஊருக்கு சென்றார்.. அப்போது, அவருடைய நகை திருடு போனது.
ரண்டரை சவரன் நகை
இது தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, கோவில்பட்டி மந்திதோப்பை சேர்ந்த பாலாத்தாள் என்ற 45 பெண் திருடியிருப்பது தெரியவந்தது. சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்தபோது, பஸ் ஸ்டாப்பில் அங்கும், இங்கும் அலைவதுடன், பஸ்சில் ஏறி இறங்குவதை வைத்து, பாலாத்தாளை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து இரண்டரை சவரன் நகையை நேற்று பறிமுதல் செய்தனர்.
அதேபோல, ஒரு கொடுமை நடந்து, நேற்றைய தினம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது..கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில், கூட்ட நெரிசலில் உள்ள பஸ்களில் அதிகப்படியான திருட்டு சம்பவங்கள் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது..
அரசு பஸ்ஸில் கைவரிசை
குறிப்பாக, நெரிசலில் நின்றபடி பயணிக்கும் ஆண்களிடம் நகை மற்றும் பணம் பறிப்பது பெருகி கொண்டேயிருப்பதாக புகார்கள் வந்துள்ளன.. இதையடுத்து, கடந்த 3 மாதங்களாக அந்த பகுதிகளில் செல்லக்கூடிய அரசு பஸ்களில் குறிப்பாக கூட்ட நெரிசலுடன் செல்லக்கூடிய பஸ்களில் ரகசிய சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போதுதான், குறிப்பிட்ட 2 பெண்கள் மீது சந்தேகம் கிளம்பியது.. பஸ்ஸில் பயணிக்கும் ஆண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, அதற்குபிறகு அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை 2 பெண்கள் பறிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத்தன்றும், ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கூட்டம் நிறைந்த தனியார் பஸ்ஸில் 2 பெண்கள் ஏறியிருக்கிறார்கள்.. பஸ்ஸில் நின்றபடி அங்கும் இங்கும் நோட்டமிட்டு கொண்டேயிருந்தனர்..
சிக்கிய அம்பிகா, ராணி
பிறகு நெரிசலில் நின்றிருந்த ஆண்கள் மீது மோதி, சில்மிஷத்திலும் ஈடுபட்டனர்.. அப்போது அவர்களின் கவனத்தை திசைதிருப்பி அவர்களிடமிருந்து பணத்தை திருடிவிட்டார்கள்.. இதையடுத்து 2 பெண்களுமே கைதானார்கள்.
அம்பிகா, ராணி என்ற 2 பெண்களும், ஆண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு கவனத்தை திசை திருப்பிய கிடைத்ததை திருடி வந்துள்ளனர். குறிப்பாக, தனியாக வரும் வயதான ஆண்களிடம் நைசாக பேச்சு தந்து, அவர்களை ஏமாற்றி கிடைத்ததை சுருட்டி கொண்டு, அடுத்த ஸ்டாப்பிலேயே பஸ்ஸிலிருந்து இறங்கி விடுவார்களாம்..
பரபர விசாரணை
இப்போது, அம்பிகா, ராணி இருவரிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. எத்தனை பேரிடம் பணம், நகையை கொள்ளையடித்தார்கள்? எங்கெங்கு திருட்டு சம்பவத்தை அரங்கேற்றினார்கள்? இந்த திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தெல்லாம் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி வருகிறார்கள்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+