அப்போ வளர முடியுமா?.. ரூ.1 கோடி செலவாம்.. 3 மாதங்களில் 3 இன்ச் வளர்ந்த 68-வயது முதியவர்!
லண்டன்: உயரத்தை அதிகரிக்க பலரும் விரும்பி வரும் நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் ரூ.1.2 கோடி செலவு செய்து 3 மாதங்களில் 3 இன்ச் வளர்ந்துள்ளார்.
மனித படைப்பானது மிகவும் அபூர்வமானது. உலகத்தில் பல கோடி மக்கள் இருந்தாலும் அனைவரும் தங்களுக்கு என தனித்துவமான அடையாளத்துடன் இருக்கின்றனர்.
உலகில் மிக உயரமான மனிதர்களும், உலகில் மிக குட்டையான மனிதர்களும் இருக்கிறார்கள்.

உயரத்தை அதிகரிக்க முடியுமா?
இதனால் குட்டையானவர்கள் வளர்வதற்கும்.. அதிகம் வளர்ந்தவர்கள் உயரம் குறைவாக ஆவதற்கும் விரும்புவர்.. இப்படி ஆசைப்படுபவர்களுக்கு அவர்கள் விரும்புவது போல நடப்பது ஏறக்குறைய சாத்தியமற்றதே.. குறிப்பிட்ட வயதிற்கு பிறகு நம்மால் உயரத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது. ஆனால் தற்போதைய அறிவியல் காலத்தில் உயரத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

13 செ.மீ வரை அதிகரிக்கலாம்
ஆனால் இதை செய்வதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆவது மட்டும் இன்றி அந்த சிகிச்சைக்கு பிறகு அதிக வலியை தாங்க வேண்டியிருக்கும். மேலும் பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் கால் தொடை எலும்புகளை உடைத்து செய்யப்படுவதால், அதிக வலி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த செலவு மிக்க மற்றும் வலிமிக்க அறுவை சிகிச்சையின் மூலம் அதிகபட்சம் 13 செ.மீ வரை உயரத்தை அதிகரிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ஒரு முதியவர் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மிகவும் வலியை அனுபவித்து தனது உயரத்தை 3 இன்ச் அதிகரித்துள்ள சம்பவம் பலரையும் வியப்படைய செய்துள்ளது.

இங்கிலாந்து முதியவர்
இங்கிலாந்தை சேர்ந்த ராய் கான் (வயது 68) தற்போது 5 அடி 6 அங்குலம் உயரம் இருக்கிறார். இவருக்கு தனது உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்து இருக்கிறது. இதனால் தனது உயரத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்து இருக்கிறார். ஆனால் இதற்கான சிகிச்சை முறைகள் அதிக செலவு பிடிக்கும் என்பதால் தனது ஆசையை தள்ளிப்போட்டு வந்துள்ளார்.

அறுவை சிகிச்சை மூலம்
இந்த நிலையில் தற்போது உயரத்தை அதிகரிப்பதற்கான சிகிச்சையை மேற்கொண்டு 3 இன்ச் தனது உயரத்தை அதிகரித்து இருக்கிறார் ராய். தற்போது அவரது உயரம் 5 அடி 9 அங்குலமாக அவரது உயரம் அதிகரித்துள்ளது. மிகவும் வலி மிக்க சிகிச்சைகளில் ஒன்றாக கருதப்படும் காலை நீளமாக்கும் அறுவை சிகிச்சை செய்து தனது உயரத்தை அதிகரித்து இருக்கிறார் ராய்.

எப்படி உயரத்தை அதிகரித்தேன்..
இதற்காக ரூ.1.2 கோடி செலவு செய்து இருக்கிறார். தற்போது தனது உயரம் 6 அடியை நெருங்கிவிட்டதால் மகிழ்ச்சி அடைந்து இருக்கும் ராய் கான், ஏன் அறுவை சிகிச்சை மூலம் உயரத்தை அதிகரித்தேன் என்பது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். இது குறித்து ராய் கான் கூறுகையில், இது ஒரு பெரிய விவகாரம் இல்லை. இளம் வயதில் இருந்தே இது குறித்து நான் அறிந்து இருந்தேன். இருந்தாலும் போதுமான நேரம் உள்ளிட்ட காரணங்களால் இந்த சிகிச்ச்சை செய்ய முடியாமல் இருந்தது.

உயரம் குறைவாக இருப்பதாகவே
தற்போது எனக்கு நேரமும் செலவு செய்யவும் முடியும் நிலை வந்து இருப்பதால் தற்போது இந்த சிகிச்சையை மேற்கொண்டு உயரத்தை அதிகரித்துள்ளேன். உண்மையில் இதில் பெரிய சிக்கல் எதுவும் இல்லை. உயரம் குறைவாக இருப்பதாகவே நான் எப்போதும் நினைத்து கொண்டு இருப்பேன். குறிப்பாக எனது மனைவியும் இதைப்பற்றி அதிகம் கவலைபட்டார். தற்போது நான் உயரத்தை அதிகரித்து இருப்பதை பார்த்து அவர் மகிழ்ச்சி அடைவார்.

வலிமிக்க நாட்களாக கடந்தன
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு குணம் அடையும் காலம் மிகவும் கடினமாக அமைந்தது. மிகவும் வலிமிக்க நாட்களாக கடந்தன. ஆனால் அதை கடந்துதான் செல்ல வேண்டும்" என்றார். இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டு உயரத்தை அதிகரித்த மருத்துவர் கெவின் தேபிபர்ஷத் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சை செய்து முடிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் ஆனது.

ஒரு இன்ச் வளர 25 நாட்கள்
வளர்ச்சி அடைவதற்கான நடைமுறைகளை நோயாளிதான் அதன்பிறகு எடுக்க வேண்டியிருந்தது. ஒருநாளைக்கு மில்லிமிட்டர் என்ற அளவில் வளர்ச்சி இருந்தது. இதனால், ஒரு இன்ச் வளர 25 நாட்கள் ஆகும். கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஆகின" என்றார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications