லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசிவரை தெரியாத அந்த "ரகசியம்".. பாவம் டயானா.. மலைக்க வைக்கும் "மெஜஸ்டிக்" குயினின் மறுபக்கம்

ராணி எலிசபெத் நாய்க்குட்டி, பூனைகள் மீது மிகுந்த பாசத்தை பொழிந்து வந்துள்ளார்

Google Oneindia Tamil News

லண்டன்: ராஜவம்சத்தையே சேர்ந்திருந்தாலும், பெண்ணாக பிறந்து, தன் செல்வாக்கு மிக்க ஆளுமையை நிலைநாட்டி, இன்று உலகையே திரும்பி பார்க்கவைத்துவிட்டு போயுள்ளார் எலிசபெத்.. அரசியாக நாட்டை ஆண்டாலும், தனிப்பட்ட முறையில் எலிசபெத்தின் குணநலன்கள் வியக்கவும் வைக்கிறது!

"என் வாழ்க்கையே உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன்" என்று 21 வயது இளம்பெண்ணின் வார்த்தைகளை கேட்டு மலைத்து பார்த்தனர் இங்கிலாந்து மக்கள்..

எத்தனையோ கனவுகளிலும் ஆசைகளிலும் பட்டாம்பூச்சியாய் சுற்றித்திரியும் வயதுடைய பெண்ணிடம் இருந்து இத்துணை பக்குவம் நிறைந்த வார்த்தைகளா? என்று ஆச்சரியப்பட்டனர்.. அப்போதே மக்களை தன் அன்பிலும், நாட்டுப்பற்றிலும் கட்டிப்போட்டவர்தான் எலிசபெத்.

10 நாட்களுக்கு பின் ராணி எலிசபெத் இறுதிசடங்கு.. 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி! 10 நாட்களுக்கு பின் ராணி எலிசபெத் இறுதிசடங்கு.. 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி!

 கலர் கலர் உடைகள்

கலர் கலர் உடைகள்

ஒரு ராஜவம்சத்துக்குரிய, மற்றும் ராணிகளுக்குரிய அத்தனை குணாம்சங்களும் எலிசபெத்துக்கும் இருந்தன..
வைராக்கியத்துக்கு பஞ்சமில்லாதவர் எலிசபெத்.. அவரது உடை அலங்காரமே அதை உலகிற்கு பறைசாற்றியது.. கலர் கலர் உடைகள், விலை உயர்ந்த கற்கள் பதித்த தொப்பிகள், ராணிக்கான கிரீடம் என வசீகரம் குறையாதவராக கடைசிவரை வலம் வந்தார்.. பார்த்ததுமே ஒரு மிடுக்கான தோற்றம் மட்டுமல்ல, ராஜகளையுடன் கூடிய மரியாதையும் அனைவருக்கும் வந்து செல்லும். யாரிடமும் வெளிப்படையாக பேசும் பழக்கமில்லாதவர் எலிசபெத்..

 நாய்க்குட்டி

நாய்க்குட்டி

அமைதியான முகம், குறைவான பேச்சு, தங்கை மீது அபரிமிதமான அன்பு, செல்லப்பிராணிகளின் மீது உயிரையே விட்டுவிடக்கூடிய அளவுக்கு ப்ரியம் என அத்தனை உன்னதமான உணர்வுகளுடன் நடைபோட்டவர்.. குறிப்பாக, நாய்குட்டி, குதிரைகள் மீது அலாதி பிரியம் உடையவர்.. நாய்க்குட்டி மீது இவருக்கு இருந்த ஆசையை பார்த்துவிட்டு, இவரது அப்பா, 'வேல்ஸ்' நாய்க்குட்டியை வாங்கி தந்தாராம்.. அன்றிலிருந்து அரண்மணையில் நாய்க்குட்டிகள் ஏராளமாக இடம்பெறத் துவங்கின.. புதுவித வாகனங்களை நன்றாக ஓட்டுவாராம்.. ஒருவேளை அவை பழுதடைந்தால், யாரையும் எதிர்பார்க்காமல், அதை இவரே ரிப்பேர் செய்து ஓட்டுவாராம். அந்த அளவுக்கு எந்திர நுணுக்கங்களை அறிந்து வைத்துள்ளார்.

 டிராபிக் ரூல்ஸ்

டிராபிக் ரூல்ஸ்

பொதுவாக, ராணிகளுக்கான எல்லைகள் வரையறைக்கப்படுவதில்லை.. நிர்ணயிக்கப்படுவதில்லை.. அந்தவகையில், எலிசபெத்தும், சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டுதான் விளங்கினார்.. எலிசபெத்தை எந்த சட்டத்திலும் அடக்க முடியாது.. எந்த வழக்கும் அவர் மீது பதிய முடியாது.. உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம்.. பாஸ்போர்ட்கூட தேவையில்லை.. டிராபிக் ரூல்ஸ் இல்லை.. இத்தனை சுதந்திர எல்லைகள் தன்னை சுற்றி இருந்தாலும், அந்த எல்லைகளை எலிசபெத் ஒருநாளும் மீறவில்லை என்பதுதான் வியப்புக்குரியது.

ப்ரியங்கள்

ப்ரியங்கள்

பொதுவாக, ராஜாங்க நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் ஆணவத்தை வெளிப்படுத்தி, தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட துடிப்பார்கள்.. ஆனால், எலிசபெத் வித்தியாசமானர்.. எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கும் அதிகாரம் இருந்தபோதும், போர் தொடுக்க விரும்பியதே கிடையாது.. தன் ஆட்சி காலத்தில் 13 அமெரிக்க அதிபர்கள் மாறியிருக்கிறார்கள் என்றாலும், அனைவரையுமே தன்னுடைய அரண்மனைக்கு விருந்து தந்து உபசரித்தவர் எலிசபெத்.. இந்தியாவுக்கும் எலிசபெத்துக்கும் உறவானது பல வருடங்களாகவே நீடித்து வருகிறது.. 1961, 1983, 1997- போன்ற வருடங்களில் இந்தியாவுக்கு வந்து சென்றாலும், இந்த நாட்டின்மீது எலிசபெத் வைத்திருந்த மரியாதையும், ஈர்ப்பும் அளவில்லாதது..

 ஆண்ட்டி அழகு

ஆண்ட்டி அழகு

கமலின் மருதநாயகம் படப்பிடிப்பை தொடங்கி வைத்தபோது, "இந்த ஆண்ட்டி ரொம்ப அழகாக இருக்காங்க" என்று ஸ்ருதிஹாசன், கமலிடம் சொன்னாராம்.. சினிமா படப்பிடிப்புக்காக ராணி வந்த நிகழ்வானது, இந்தியா சினிமாவுக்கே பெருமையை தேடி வந்தது.. மருமகள் டயானா விஷயத்தில் பலரது விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் ஆளானார் எலிசபெத்.. ஒரு சாதாரண ஸ்கூல் டீச்சரான டயானா, பக்கிங்ஹாம் பேலசில் எப்படி நடத்தப்பட போகிறாரோ என்று காத்துக்கிடந்த கழுகுக் கண்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.. காரணம், டயானாவுடனான எலிசபெத்தின் புரிதல் மிக ஆழமானது.. அழகானது..

டயானா

டயானா

அதை பெரும்பாலும் யாரும் அறியவில்லை.. சார்லஸூடனான உறவிலும், இணக்கத்திலும்தான் டயானாவுக்கு விரிசல் வந்ததே தவிர, எலிசபெத் மீது கிடையாது.. இன்னும் சொல்லப்போனால், தனக்கு மனசு சரியில்லாமல் போனால், எலிசபெத்தை தேடி சென்று நீண்ட நேரம் டயானா பேசிக் கொண்டிருப்பாராம்.. ஆனால், அப்போதைய பத்திரிகைகள் எலிசபெத்தை திட்டி திட்டி எழுதின.. டயானா மாளிகையை விட்டு சென்றதற்கு காரணமே எலிசபெத் தான் என்று வாய் கூசாமல் சொல்லின.. சார்லஸ் டயானாவை ஒதுக்கியது, எலிசபெத்துக்கு வெறுப்பைதான் தந்துள்ளது..

ரகசியம்

ரகசியம்

ஆனால், ராணியின் இப்படி கரிசன பக்கம் கடைசிவரை பெரும்பாலானோருக்கு தெரியாமலேயே போய்விட்டது.. ஆட்சி, அதிகாரம் வானளவாக இருந்தபோதிலும், கடைசிவரை வார்த்தைகளை அளந்து அளந்து பேசக்கூடியவராகவே திகழ்ந்துள்ளார் எலிசபெத், அதிர்ந்துகூட பேசியதில்லை என்ற செய்தி மேலும் வியப்பை கூட்டுகிறது. கண்ணியமும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நிறைந்தவராக இருந்ததால் மட்டும்தான், 70 வருடம் ராணியாக அவரால் வீற்றிருக்க முடிந்தது..!

English summary
Great Leadership Qualities of Queen Elizabeth II and Elizabeth was loved by all ராணி எலிசபெத் நாய்க்குட்டி, பூனைகள் மீது மிகுந்த பாசத்தை பொழிந்து வந்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X