யு.கேவில் மேல் படிப்பு படிப்பது எப்படி? இந்தியர்களுக்கு ஏற்ற நாடா இங்கிலாந்து? முழு விபரம்
லண்டன்: வெளிநாடுகளில் படிப்பை தொடர விரும்புவோருக்கு இங்கிலாந்து சிறந்த நாடா? என்பது பற்றியும், இங்கிலாந்தில் படிப்பை தேர்வு செய்வதற்கு முன்பு தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் உள்ள பெரும்பலானவர்களுக்கு வெளிநாடுகளில் சென்று பட்டமேற்படிப்பை படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இது பலருக்கும் கைக்கூடினாலும் சிலருக்கு எட்டாக்கனியாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். இதற்கு பொருளாதார நிலை, வெளிநாட்டு கல்வி பற்றிய குழப்பம் உள்பட பல்வேறு காரணங்களை கூறலாம்.
பொதுவாக வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர வேண்டும் என நினைத்தால் அனைவரின் மனதிலும் தோன்றும் ஒரு எண்ணம் என்பது எந்த நாட்டை தேர்வு செய்வது என்பது தான். இது மிகவும் சவாலானதும் கூட. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையுடன் கூடிய கருத்துகள் உள்ளது. இந்த கருத்துக்கள் என்பது அவர்களது பார்வை மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலானது. அந்த வகையில் வெளிநாட்டில் ஒவ்வொருவரின் லட்சியத்துக்கு ஏற்ப படிப்பை தேர்வு செய்வது எப்படி? என்பதை அறிய சில முக்கிய விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
ஆர்வத்தை அறிதல் அவசியம்
அதில் முதலாவதாக மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஆர்வமுள்ள துறையை தேர்வு செய்ய வேண்டும். இதனை அறிந்து தெளிவான முடிவு எடுக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் இதனை அறிந்து இருந்தாலும் கூட பலருக்கு இன்னும் குழப்பமான மனநிலை இருக்கலாம். அப்படியானவர்கள் தங்களுக்கு அறிவியல் துறையில் நாட்டம் உள்ளதா அல்லது கலைத்துறையில் விருப்பம் உள்ளதாக என்பது பற்றி தோராயமாக அறிந்திருந்திருத்த அவசியமாகும். இதுதொடர்பாக குடும்பத்தினர், நண்பர்களுடன் விவாதிப்பது தான் உங்களின் விருப்பமான துறையை தேர்வு செய்வதற்கான முதல் படியாகும். இதில் உங்களுக்கு தெளிவு ஏற்படும் பட்சத்தில் சரியான ஆலோசகரை Reaching Out to a Counsellor
அணுகினால் உங்களுக்கான லட்சியத்தையும், இலக்குகளையும் ஒவ்வொருவரும் எளிதாக அடையலாம்.
பட்டப்படிப்புக்கு பிறகு என்ன செய்வது?
2வதாக தனிப்பட்ட விருப்பம் மற்றும் கல்வி திறன்களின் அடிப்படையில் சிலர் வேகமாக கற்கும் வகையில் குறுகிய கால படிப்புகளை தேர்வு செய்ய விரும்பலாம். இது தேவையானது எனினும் சவால்கள் உள்ளன. மறுபுறம் பெரும்பாலான மாணவர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் நோக்கத்தில் அல்லது வெளிநாட்டில் குடியேறும் எண்ணத்தில் வெளிநாட்டில் கல்வியை தேர்வு செய்கிறார்கள். இதற்கு பட்டப்படிப்பை முடித்தவுடன் உங்களுக்கு என்ன வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்வது, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் அதுசார்ந்த விஷயங்களை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இது மாணவ-மாணவிகள் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.
உதவித்தொகை பற்றிய அறிவு
3வதாக இந்தியாவில் பல மாணவர்கள் சர்வதேச பல்கலை கழகங்களில் உயர்கல்வியை படிக்க ஆசைப்பட்டாலும் கூட நிதிப்பற்றாக்குறையால் அதனை முன்னெடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இதற்கிடையே தான் கடந்த சில ஆண்டுகளாக பல சர்வேதச நாடுகளில் அங்கு வாழ்வதற்கான வாழ்வாதார செலவு என்பது அதிகரித்துள்ளது. இதனால் பல பல்கலைக்கழங்களில் உயர் கல்விக்கான கட்டணமும் உயர்ந்துள்ளது. இது இந்திய மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது. இந்த நிதிச் சுமையைக் குறைக்க உதவும் சரியான ஸ்காலர்ஷிப்களைக் கண்டறிவது என்பது மாணவர்களின் வெளிநாடு படிப்புக்கு முக்கிய உதவியாக இருக்கும். இதை அறிந்து கொள்வது முக்கியமானதாகும்.
இங்கிலாந்தில் படிப்பது சிறப்பானதா?
பிற வெளிநாடுகளை ஒப்பிடும்போது இங்கிலாந்தில் கல்வி கற்பது என்பது சிறப்பானதா? என்ற கேள்விக்கான பதில் என்பது இங்கிலாந்துக்கு சென்ற முன்அனுபவம் இல்லாத அல்லது அங்கும் வாழும் நோக்கம் இல்லாத பலருக்கும் கடினமானதாக தான் இருக்கும். இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அமைப்புகளின் ஆராய்ச்சிகளை இணையதளத்தில் தேடிப்பார்த்தால் அதற்கான பதில் கிடைக்கும். இருப்பினும் உண்மை நிலவரம் என்பது உங்களின் அனுபவத்தின் வாயிலாகவும், உங்களின் மனநிலையையும் தான் சார்ந்தது. இருப்பினும் வெளிநாட்டில் தான் கல்வி கற்க வேண்டும் என விருப்பப்பட்டதால் அதற்கு முன்பு கருத்தில் கொள்ள 5 முக்கிய விஷயங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
இங்கிலாந்து காலாச்சாரம் என்ன?
உலகமயமாக்கலுக்கு ஏற்ப இங்கிலாந்தில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் குடியேறி வருகின்றனர். இதற்கு ஏற்ப இங்கிலாந்தும் பன்முக கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளும் நாடாக மாறியுள்ளது. இதனால் இங்கிலாந்தில் படிக்கும் ஒருவரால் பன்முக கலாச்சாரத்தை அனுபவிக்க முடியும் என்பதில் சந்தேகம் வேண்டாம். மேலும் பலதரப்பப்பட்ட கலாசாரங்களை பின்பற்றும் மனிதர்களை சந்தித்து நட்பு ஏற்படுத்தலாம். இது உங்களுக்கு பிற்காலத்தில் உதவலாம்.
இனவெறி பாகுபாடு உண்டா?
பொதுவாக வெளிநாடு படிப்பு என்றவுடன் விண்ணப்பத்தாரருக்கும், அவர்களின் பெற்றோருக்கம் மனதில் தோன்றுவது இனவெறி பாகுபாடு தொடர்பான பிரச்சனை தான். ஏனென்றால் இது பாதுகாப்பு தொடர்பான விஷயமாகும். இதனை ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் பெரும்பலான மக்கள் வெறுத்து வருகின்றனர். இங்கிலாந்தில் இந்தியர்கள் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்களா? என்ற கேள்விக்கு திட்டவட்டமான பதில் என்பது இல்லை. ஒரு இந்தியனாக இந்தியாவிற்குள்ளேயே சிலர் பாகுபாட்டை சந்தித்து இருக்கலாம். இதனால் வெளிநாட்டு படிப்பை தேர்வு செய்யும்போது இதனை நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். இதன்மூலம் தேவையற்ற மோதலை தவிர்ப்பதோடு சொந்த நாட்டின் கலாசாரத்தை பின்பற்றவும் முடியும்.
படிப்புக்கான காலஅளவு என்ன?
உலகின் பெரும்பாலான இளங்கலை பட்டப்படிப்புகள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகளாக உள்ளன. இருப்பினும் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழங்களில் குறுகிய கால இளங்கலை பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகள் ஒன்று முதல் 2 ஆண்டுகள் கொண்டவையாக உள்ளன. இருப்பினும் பெரும்பாலான இளங்கலை படிப்புகள் 3 முதல் 4 ஆண்டுகள் கொண்டவையாக உள்ளன.
சிறந்த பல்கலைகழக்கங்கள் என்னென்ன?
இங்கிலாந்தில் சிறந்த பல்கலைகழகங்கள் எது? என்பது தொடர்பாக சர்வே என்பது அமைப்புகள் ரீதியாக மாறுபடும். அந்த வகையில் இங்கிலாந்தில் தரமான கல்விக்கும், மாணவர்கள் விரும்பும் கல்விக்கும் சிறந்ததாகவும் புகழ்பெற்றதாகவும் 5 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதன்படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகம், இம்பீரியல் கல்லூரி லண்டன், லண்டன் யூனிவர்சிட்டி கல்லூரி, எடின்பர்க் பல்கலைக்கழகம் ஆகியவை சிறந்தவையாக உள்ளன.
பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் என்ன?
இதில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக்கத்தை பொறுத்தமட்டில் Arts and humanities, Life sciences and medicine,
Social Sciences and Management, Natural Sciences, Engineering and Technology ஆகிய பாடப்பிரிவுகள் மிகவும் புகழ்பெற்றவையாக உள்ளன. இம்பிரியல் கல்லூரி லண்டனில் Science, Engineering, Business,Medicine ஆகிய படிப்புகளும், யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் Education, Architecture, Archaeology, Anthropology, Life Sciences, Medicine, Dentistry ஆகிய படிப்புகளும், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் Arts and Humanities, Medicine, Veterinary Medicine, Business, Engineering, Space Science ஆகிய படிப்புகளும், புகழ்பெற்றவையாக உள்ளன.
இங்கிலாந்தில் வேலை செய்யலாமா?
இங்கிலாந்தில் படிப்பை முடித்தவுடன் அங்கு வேலை செய்யவும் வாய்ப்பு உள்ளது. இதற்காக மாணவர்கள் UK கிராஜுவேட் விசாவிற்கு விண்ணப்பம் செய்து பெற வேண்டும். இந்த விசா மூலம் மாணவர்கள் 2 ஆண்டுகள் வரை இங்கிலாந்தில் வசித்தபடி வேலை செய்யலாம். அதன்பிறகு இந்த விசாவை நீட்டிப்பு செய்ய முடியாது.
இங்கிலாந்தில் குடியேறும் வாய்ப்பு எப்படி?
இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பிறகு பிற நாட்டு மாணவர்கள் UK கிராஜுவேட் விசா விண்ணப்பித்து பெற வேண்டும். அதன்பிறகு இன்னொரு பொருத்தமான விசா பெற வேண்டும். அதன்படி இங்கிலா்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு நிரந்தரமாக வசிக்க விண்ணப்பம் செய்யலாம். இந்த தகவல்கள் மூலம் வெளிநாடான இங்கிலாந்து நமக்கு பொருத்தமான நாடா என்பதை தேர்வு செய்ய ஓரளவுக்கு இது உதவும். மேலும் இதுபோன்ற அப்டேட்களை Edudha மூலம் அறிந்து கொள்ளலாம். அதோடு join the Edudha community இணையலாம்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications