Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க.. இனி சுவர்களில் யூரின் போனால் அவ்வளவுதான்! ஃபாரினில் பக்கா ப்ளான்!

Subscribe to Oneindia Tamil

லண்டன் : அரசு சுவர்கள் பேருந்து நிலையங்கள் பொது இடங்கள் என பல பகுதிகளிலும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துபவர்களால் பொதுமக்கள் அடையும் இன்னலை வார்த்தைகளால் சொல்ல முடியாது. தற்போது அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை போன்ற பெரு நகரங்களாக இருந்தாலும் சரி கிராமப் பகுதிகளாக இருந்தாலும் சரி சாலையோரங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துபவர்களை நாள்தோறும் நீங்கள் பார்க்கலாம்.

பெண்கள் இருக்கிறார்களே மக்கள் நடப்பார்களே என்பது குறித்து கவலைப்படாமல் சாலையோரங்களில் தங்கள் இஷ்டத்துக்கு சிறுநீர் கழிப்பவர்களை என்ன சொல்லியும் திருத்த முடியாது.

சுவர்களில் சிறுநீர்

சுவர்களில் சிறுநீர்

இதனால் சாலைகளில் பயணிப்போர் முகம் சுளித்தாலும் அதனை அவர்கள் கண்டு கொள்வது கிடையாது சிறுநீர் கழிக்காதே தண்டனை வழங்கப்படும் என எல்லா சுவர்களையும் எழுதி வைத்தாலும் அது அவர்கள் கண்களுக்கு மட்டும் தெரியாது போல இந்த காட்சிகளை உலகின் எல்லா இடங்களிலும் பார்க்கலாம் போல. அப்படி பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர் கண்டுபிடித்துள்ள கண்டுபிடிப்பு தான் தற்போது இணையதளங்களை ஆக்கிரமித்து இருக்கிறது.

நவீன மெஷின்

நவீன மெஷின்

அதாவது சாலையோரங்களில் உள்ள சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் அவர்களாகவே இனி திருந்தி தான் ஆக வேண்டும். அப்படி ஒரு கண்டுபிடிப்பை லண்டனில் கண்டுபிடித்துள்ளதோடு அதை சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில் வெற்றியும் கிடைத்திருப்பது தான் தற்போது ஆச்சரியம். மூட்டை பூச்சிகளை கொல்லும் நவீன மெஷின் போல சுவர்களில் சிறுநீர் கழித்தால் மீண்டும் அவர்கள் மீது திருப்பி அடிக்கும் வகையில் புதிய வகை திரவம் கலந்த பெயிண்ட் ஒன்று லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பி அடிக்கும் திரவம்

திருப்பி அடிக்கும் திரவம்

இந்த திரவத்தை கலந்த நவீன பெயிண்டை சுவர்களில் அடிக்கும் போது அதில் யாராவது சிறுநீர் கழித்தால் அவர்கள் மீது திருப்பி அடிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது லண்டனில் அதிக அளவில் புகார்கள் வந்த 10 பகுதிகளில் இந்த பெயிண்ட் சோதனை முறையில் அடிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது சுவர்களில் பல அடுக்குகளாக இந்த பெயிண்ட் பூசப்படும். இதனால் சுவரில் படும் சிறுநீர் மற்றும் எந்த திரவமாக இருந்தாலும் லேசாக உறிஞ்சப்பட்டு சிறுநீர் கழிப்பவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் மேலே திருப்பி அடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சோதனை வெற்றி

சோதனை வெற்றி

சோதனை முறையாக செய்யப்பட்ட இந்த முயற்சி பயன் அளித்த நிலையில் லண்டனில் சோக்கோ பகுதியில் பல கட்டிடங்களில் இந்த ஆன்ட்டி பி பெயிண்ட் பூச திட்டமிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்கள் அதிக அளவில் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் பகுதிகளில் இந்த பெயிண்டை பூசுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக லண்டன் அதிகாரிகள் கூறி இருக்கின்றனர். இந்த பெயிண்ட் குறித்த தகவல் வெளியானது போதும் பல மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+