லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரிட்டன் பிரதமர் தேர்தல்: பின் தங்கும் ரிஷி சுனக்.. அடுத்த பிரதமராகிறார் லிஸ் டிரஸ்?

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் அடுத்த பிரதமருக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் லிஸ் டிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, இங்கிலாந்தில் புதிய பிரதமருக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்தின் இந்த புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனக் அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்று தற்போது இறுதி வேட்பாளராக முன்னேறினார்.

2 பள்ளி சிறுமிகள்.. சீண்டிய சாமியார்! கர்நாடக மடத்தில் அரங்கேறிய கொடூரம்.. இழுபறிக்கு பின் கைது 2 பள்ளி சிறுமிகள்.. சீண்டிய சாமியார்! கர்நாடக மடத்தில் அரங்கேறிய கொடூரம்.. இழுபறிக்கு பின் கைது

 போட்டியில் ரிஷி சுனக்

போட்டியில் ரிஷி சுனக்

இதனால் இங்கிலாந்து புதிய பிரதமர் ஆகும் வாய்ப்பு இவருக்கே இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக இவருக்கு போட்டியாக களமிறங்கிய 46 வயதான லிஸ் டிரஸ் இந்த பிரதமர் தேர்தலில் முன்னிலை வகித்ததாக கூறப்பட்டது. எனினும் களத்தில் 2 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதால் இதில் ஒருவர் தான் இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் என்பது உறுதியாகிவிட்டது. பிரதமர் பதவிக்கான போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை, திடீர் திருப்பமாக லிஸ் டிரஸ் முந்துவதாக தகவல்கள் கூறப்பட்டது.

 அனல் பறக்கும் பிரசாரம்

அனல் பறக்கும் பிரசாரம்

தற்போது பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்வு இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் இருவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். களத்தில் உள்ள ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக லண்டனில் கன்சர்வேட்டிவ் ப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற இந்திய வம்சாவளி அமைப்பினர் ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ரிஷி சுனக், அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு நமஸ்தே, சலாம், கெம் சோ என பல மொழிகளில் வணக்கம் செலுத்தி பிரசாரம் செய்தார். தற்போது பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்வு இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் இருவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். களத்தில் உள்ள ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக லண்டனில் கன்சர்வேட்டிவ் ப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற இந்திய வம்சாவளி அமைப்பினர் ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ரிஷி சுனக், அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு நம்ஸ்தே, சலாம், கெம் சோ என பல மொழிகளில் வணக்கம் செலுத்தி பிரசாரம் செய்தார்.

 பெற்றோர் முன்னிலையில்..

பெற்றோர் முன்னிலையில்..

இந்திய வம்சாவளியினர் மத்தியில் இந்தியிலும் பேசிய ரிஷி சுனக், ஆப் சப் மேரே பரிவார் ஹோ(நீங்கள் அனைவரும் என் குடும்பம்) என்று பேசி வாக்கு சேகரித்து வந்தார். தொடர்ந்து பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று ரிஷி சுனக் லண்டன் நகரின் உள்ள ஒரு கச்சேரி அரங்கில் பேசினார். அப்போது அவர் பிரசார கூட்டத்துக்கு பெற்றோர் யாஷ்விர், உஷா மற்றும் மனைவி அக்‌ஷதா மூர்த்தி ஆகியோரையும் அழைத்து வந்திருந்தார். அப்போது அவர்கள் முன்னிலையில் ரிஷி சுனக் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 தீவிர வாக்கு சேகரிப்பு

தீவிர வாக்கு சேகரிப்பு

இதேபோல் லிஸ் டிரசும் பல பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்றுமுன் தினத்துடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில், இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற உள்ளது. கடந்த 4 ஆம் தேதி முதல் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இதற்கான ரிசல்ட் ஆனது வருகிற 5 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.இதேபோல் லிஸ் டிரசும் பல பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்றுமுன் தினத்துடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில், இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற உள்ளது. கடந்த 4 ஆம் தேதி முதல் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இதற்கான ரிசல்ட் ஆனது வருகிற 5 ஆம் தேதி அறிக்கப்பட உள்ளது.

 லிஸ் டிரஸ்சிற்கே அதிக ஆதரவு

லிஸ் டிரஸ்சிற்கே அதிக ஆதரவு

இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு ஆக உள்ள நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமர் ஆவதற்கான அதிக வாய்ப்பு லிஸ் டிரஸ்க்கு உள்ளதாக தெரிகிறது. கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ்சிற்கே அதிக ஆதரவு நிலவியதாக கருத்துக்கணிப்புகளும் கூறி வந்தன. குறிப்பாக வரிக்குறைப்பை மையப்படுத்தி தேரதல் பிரசாரத்தில் ஈடுபட்ட லிஸ் டிரசிற்கு தான் ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் அடுத்த பொதுத்தேர்தல் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Rishi Sunak, who is of Indian origin, has suffered a setback in the election for the next Prime Minister of England. Meanwhile Liz Dress is said to have a high chance of winning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X