“மாப்பிள்ளை சார்.. கல்யாணத்துக்கு இப்டியா டிரஸ் போட்டுட்டு வர்றது?”.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
தனது திருமணத்தில் மிகவும் எளிமையாக உடை அணிந்துள்ள மணமகனின் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
லண்டன்: லண்டனில் கருப்பு நிற டீசர்ட், புளூ ஜீன்ஸ் என தனது திருமணத்திற்கே விருந்தாளியைப் போல், மிகவும் எளிமையான உடையில் சென்ற மணமகனைப் பற்றிய வீடியோ நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வு. அதனால்தான் அந்த நாளை 'பிக் டே' எனக் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு மதத்தினரும் தங்களது திருமணத்திற்கு என பிரத்யேகமாக டிரஸ் கோட் எனப்படும் உடை பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சமீபகாலமாக திருமணத்திற்கு என்ன உடை அணிவது, போட்டோஷூட் என அதிகம் மெனக்கெடுகின்றனர் மணமக்கள்.
ஒவ்வொரு சம்பிரதாயத்திற்உம் ஒவ்வொரு உடை என திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ஷாப்பிங் ஆரம்பித்து விடுகிறார்கள். மணமகளுக்கு இருப்பது போல் விதவிதமான உடைகள் மணமகனுக்கு இருப்பதில்லை என்ற போதும், முடிந்தவரை திருமணத்தன்று மற்றவர்களைவிட மிகவும் அழகாக தோன்றுவது என்பதில் மணமகன்களும் கவனமாக இருப்பார்கள்.
ஆனால் சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகன், கருப்பு நிற டீசர்ட், புளூ ஜீன்ஸ் அணிந்து, விருந்தாளியைப் போன்ற தோற்றத்தில் காணப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

டி சர்ட்டில் மணமகன்
சம்பந்தப்பட்ட அந்த வீடியோவில் மணப்பெண் அழகிய வெள்ளை நிற கவுனில் தேவதை போன்ற மேக்கப்பில் அழகாக இருக்கிறார். அவருக்கு அருகில் டீ சர்ட், ஜீன்ஸ் என எளிய உடையில் ஒருவர் நிற்கிறார். பின்னர் வழக்கமான சம்பிரதாயங்கள் நடைபெற, அப்பெண்ணின் கையில் மோதிரத்தை மாற்றி தனது துணைவியாக்கி கொள்கிறார் அந்நபர்.

டிக் டாக் வீடியோ
இது போன்ற கிறிஸ்தவ முறைப்படி நடக்கும் திருமணங்களில், மாப்பிள்ளை பெரும்பாலும் கோட் சூட் போன்று கம்பீரமாகக் காட்சி அளிப்பார். ஆனால் ஏனென்று தெரியவில்லை இந்த மாப்பிள்ளை மிகவும் எளிமையாக தனது திருமணத்தில் பங்கேற்றுள்ளார். இந்த திருமண வீடியோவை மணப்பெண்ணின் தோழி வைலட் பிரைஸ் என்பவர் டிக்டாக் வீடியோவாக வெளியிட, அது இணையத்தில் வைரலாகி விட்டது.

வீடியோ நீக்கம்
இந்த வீடியோ சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள மணமகனின் உடை பற்றி சமூகவலைதளத்தில் கடும் விமர்சனங்கள் குவிந்ததால், டிக் டாக்கில் இருந்து அதனை நீக்கி விட்டார் வைலட் பிரைஸ். ஆனாலும் அதனை மற்றவர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருவதால், மணமகனின் உடை பற்றிய விவாதம் இன்னமும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வருகிறது.

நெட்டிசன்கள் ட்ரோல்
"மாப்பிள்ளை பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிவிட்டு அப்படியே தூங்கிவிட்டாரா?", "காலையில் எழுந்து உடை மாற்றாமல் அப்படியே வந்து விட்டாரா?", "அவருக்கு இன்று திருமணம் என தெரியுமா? தெரியாதா?", "என்ன இது திருமண நாளில் கூடவா இப்படியெல்லாம் கேஷ்வல் உடையில் வருவார்கள்?" என மாப்பிள்ளையை சகட்டு மேனிக்கு ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

தோழி பதிலடி
இவற்றைப் பார்த்த வைலட், "கடவுளே... அவர்களது திருமணம் முடிந்துவிட்டது. எனது தோழி திருமணம் செய்துகொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். மாப்பிள்ளை எப்படி ஆடை அணிந்திருந்தார் என்பது பற்றி அவள் கவலைப்படவில்லை" எனக் கிண்டல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications