லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓரங்கட்டப்பட்ட போரிஸ்! அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்? ரேசில் முந்தும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவருக்கு அடுத்து யார் அந்நாட்டின் பிரதமர் பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்பதைப் பார்க்கலாம்!

Recommended Video

    Boris Johnson-க்கு Replace ஆவது யார்? Next Britain PM-க்கு போட்டி | *World

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒருவரை முக்கிய பதவியில் நியமித்தது பெரியளவில் சர்ச்சையானது.

    இதையடுத்து கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் என சுமார் 54 பேர் ராஜினாமா செய்தனர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது.

    Boris Johnson: 48 மணி நேரத்தில் 54 பேர் ராஜினாமா.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகினார் Boris Johnson: 48 மணி நேரத்தில் 54 பேர் ராஜினாமா.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகினார்

    ராஜினாமா

    ராஜினாமா

    இந்தச் சூழலில் போரிஸ் ஜான்சன் இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமர் தேர்வு செய்யும் வரை இடைக்கால பிரதமராகத் தொடர உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். அவர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவருக்குப் பதிலாக வேறு யார் பிரதமர் பதவியை ஏற்பார் என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

     ரிஷி சுனக்

    ரிஷி சுனக்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 42 வயதான ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது. கொரோனா லாக்டவுன் சமயத்தில் சிறு தொழில்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு பெரிய உதவி தொகுப்பை அறிவித்ததால் இவர் பிரபலம் ஆனார். இவர் பெரியளவில் சர்ச்சையில் சிக்கவில்லை என்றாலும் கூட, லாக்டவுன் சமயத்தில் விருந்தில் கலந்து கொண்டதற்காக போரிஸ் ஜான்சன் உடன் இவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. பஞ்சாபைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், இன்ஃபோசிஸ் நிறுவனர் என்ஆர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

     பென்னி மோர்டான்ட்

    பென்னி மோர்டான்ட்

    பிரிட்டன் வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் வலுவான பிரெக்ஸிட் பார்வை கொண்டவர். அவருக்கும் கட்சியில் வலுவான சப்போர்ட் உள்ளது. மக்கள் செல்வாக்கு கொண்டு நல்ல தலைமைப் பண்புகளைக் கொண்ட தலைவராக பென்னி மோர்டான்ட் கருதப்படுகிறார். ஜான்சனுக்குப் பின், அந்த இடத்தை இவர் நிரப்பும் வாய்ப்புகள் அதிகம். கடந்த காலங்களில் இவர் பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். பிரிட்டன் நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெயரையும் பெற்றவர்.

     பென் வாலஸ்

    பென் வாலஸ்

    பென் வாலஸ் இங்கிலாந்தின் பாதுகாப்புச் செயலாளராக உள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது, சிக்கலான கேள்விகளுக்கும் மழுப்பாமல் நேரடியாக பளிச் என இவரது பதில்கள் இருக்கும். இதற்காகவே இவருக்கு அங்கு ரசிகர்கள் அதிகம். அவர் ஸ்காட்ஸ் காவலர்களில் பணியாற்றினார். இப்போது ரஷ்யா-உக்ரைன் போருக்கு இங்கிலாந்தின் பிரதிநிதியாகவும் உள்ளார். போரிஸ் ஜான்சன் ஆதரவாளராகக் கருதப்படும் இவர், தொடர்ந்து ராணுவத்திற்கு அதிக தொகையைக் கேட்டு வலியுறுத்தி வரும் நபர்களில் ஒருவர் ஆவர்.

     சஜித் ஜாவித்

    சஜித் ஜாவித்

    பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட அமைச்சர் சஜித் ஜாவித்துக்கும் வாய்ப்புகள் அதிகம். கடந்த ஆண்டு லாக்டவுன் சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர் சுகாதார அமைச்சரானார். சான்சிலராக இருந்த சமயத்திலும் இவர் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார். ஜாவித் பிரதமராகத் தேர்வு செய்யும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இருப்பினும், சமீபத்தில் தான் இவர் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட உள்ளதாகக் கூறி இருந்ததால் என்ன நடக்கும் எனத் தெரியாது.

     லிஸ் டிரஸ்

    லிஸ் டிரஸ்

    லிஸ் டிரஸ் இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், போரிஸ் ஜான்சனுக்கு தொடர்ந்து சிக்கலைக் கொடுத்து வந்தார். பிரெக்ஸிட் மற்றும் உக்ரைன் போரில் பிரிட்டனில் இருந்த வந்த குரல்களில் முக்கியமானவர். வெளியுறவு செயலாளராக உக்ரைன் போர் சமயத்தில் ரஷ்யத் தொழில் அதிபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்ததற்காக இவர் புகழைப் பெற்றார்.

    English summary
    who will be britain's next prime minister (பிரிட்டன் நாட்டின் அடுத்த புதிய பிரதமர் யார்) who will be uk next prime minister
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X