பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
லக்னௌ: நமது தனிப்பட்ட மத நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நாடு மற்றும் அதன் நிறுவனங்கள் மீது திணிக்க முடியாது என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த யோகி ஆதித்யாநாத், உத்தரபிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக 300 இடங்களில் வெல்லும் என்று உறுதியாக கூறினார்.
தேசியவாதம், அனைத்துலக வளர்ச்சி மற்றும் ஏழைகளின் நலன் பற்றி பேசும் 'லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா'வை பாஜக வெளியிட்டுள்ளது. இது முழு நேர்மையுடன் செயல்படுத்தப்படும். இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலை அவர் மாற்றி விட்டார் பிரதமர் மோடி மாற்றிவிட்டார் என்றும் யோகி ஆதித்யாநாத் கூறினார்.

கஜ்வா-இ-ஹிந்த் கனவு காண்பவர்களுக்கு இது பிரதமர் மோடியின் தலைமையில் புதிய இந்தியாவாகும். புதிய இந்தியா அனைவரின் வளர்ச்சிக்கானது, ஆனால் யாரையும் திருப்திப்படுத்துவது இல்லை. இது ஷரியாத் அல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடக்கும் என்றும் யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்.
சமாஜ்வாதி தலைவர் பதவிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால்தான், அசம் கான் சிறையில் இருந்து வெளியே வருவதை அகிலேஷ் விரும்பவில்லை என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
முன்பு சாதி, மதம் மற்றும் குடும்பத்தைச் சுற்றியே அரசியல் இருந்தது. இன்று, வளர்ச்சி, நல்லாட்சி, கரிப் கல்யாண், கிராமங்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளனர் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார். உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை பாஜக விடுவிக்கிறது என்றும் கூறினார்.
இந்த அமைப்பு அரசியலமைப்புச் சட்டப்படி இயங்க வேண்டும். நமது தனிப்பட்ட மத நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நாடு மற்றும் அதன் நிறுவனங்கள் மீது திணிக்க முடியாது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து ஊழியர்களையும் 'பகவா' எனப்படும் காவி உடையை அணியச் சொல்லலாமா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நமது தனிப்பட்ட மத நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நாடு மற்றும் அதன் நிறுவனங்கள் மீது திணிக்க முடியாது என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கேரளா, மேற்கு வங்கம் போல ஆகலாம் என்ற கருத்தை மீண்டும் உறுதியாக கூறினார். நான் எனது மாநில மக்களை எச்சரித்தேன் என்றும் கூறினார் யோகி ஆதித்யாநாத்.
காங்கிரஸ் கட்சியை அழிக்க உடன்பிறப்புகள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா போதும். அதற்கு வேறு யாரும் தேவையில்லை என்றும் யோகி ஆதித்யாநாத் கிண்டலடித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications