லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லுங்கியுடன்.. தலையில் தொப்பி.. துப்பாக்கியுடன் வந்ததை மறந்துட்டீங்களா.. பகீர் கிளப்பிய பாஜக தலைவர்

உபி துணை முதல்வர் சமாஜ்வாதி கட்சியை விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா மறுபடியும் ஒரு சர்ச்சை பேச்சை பேசியுள்ளார்.. சமாஜ்வாடி கட்சியை விமர்சித்து பேசிய அந்த பேச்சுதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது... இன்னும் 2 மாதங்களில் அங்கு மாநில பொதுதேர்தல் நடக்க போகிறது..

ஆட்சியை பிடிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பிரியங்கா காந்தி கடந்த ஒரு வருடமாகவே அங்கு தங்கி களப்பணியை மேற்கொண்டு வருகிறார்..

 உபி

உபி

அதேசமயம், ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.. அதற்கான பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகிறது. இதில் மிக முக்கியமானவர், உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆவார்.. முஸ்லீம்களை தாக்கி பேசிவருவதையும் கையில் எடுத்துள்ளார்.. குறிப்பாக, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது..

மதுரா

மதுரா

இதுபோல், உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடமான கிருஷ்ண ஜென்மபூமி மீது பாஜக குறிவைத்துள்ளது... ஆனால், கிருஷ்ண ஜென்மபூமி அருகே மசூதிகள் அமைந்துள்ளன. அந்த மசூதி நிலம் இந்துக்களுக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி, பல்வேறு இந்து அமைப்புகள் ஏற்கனவே மனு அளித்துள்ளன.

சர்ச்சை

சர்ச்சை

இந்தநிலையில் கேசவ் பிரசாத் சமீபத்தில் நேற்று ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், "அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டப்படும் நிலையில், அடுத்த நடவடிக்கை, மதுராதான்.. ராமர் புகழ் வாழ்க. ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா" என்று பதிவிட்டிருந்தார்.. இதுதான் சர்ச்சையை கிளப்பி வருகிறது.. இது சம்பந்தமான விவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்குள் இன்னொரு புயலை கிளப்பி உள்ளார் மவுரியா.

 லுங்கி

லுங்கி

பிரயாக்ராஜில் நடந்த வியாபாரிகள் கூட்டம் ஒன்றில் கேசவ் பிரசாத் பேசும்போது, "2017-க்கு முன்பு இந்த உத்தரபிரதேசம் எப்படி இருந்தது? வியாபாரிகள், நிம்மதியாக இருந்தார்களா? லுங்கி அணிந்திருந்த நபர்களால் வியாபாரிகள் மிரட்டப்பட்டனர்.. முகமூடி கட்டிக் கொண்டு, லுங்கி, தலையில் தொப்பி அணிந்து, கையில் துப்பாக்கியுடன் நடமாடி கொண்டிருந்தனர் அந்த குண்டர்கள்.. அந்த அளவுக்கு சமாஜ்வாடி கட்சியின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தது..

பாஜக

பாஜக

நிலங்களை அபகரித்து கொண்டு போலீசுக்கும் போக கூடாது என்று அவர்கள் மிரட்டி கொண்டிருந்தார்கள். ஆனால் 2017-க்கு பிறகு, பாஜக ஆட்சி அமைந்த பிறகு, அப்படி குண்டர்களை எங்காவது நீங்கள் பார்க்க முடிந்ததா? லுங்கி சாப் எனப்படும் அந்த குண்டர்கள் இப்போது இல்லை என்றால் அதற்கு காரணம், இந்த பாஜக ஆட்சிதான்" என்று பேசியுள்ளார். சமாஜ்வாடி கட்சியினரை குறி வைத்து தொடர்ந்து பாஜக தலைவர்கள் பேசி வருவது ஒருபக்கம் சர்ச்சையையும் மற்றொரு பக்கம் பரபரப்பையும் கூட்டி வருகிறது.

English summary
Lungi chhaap goons roamed freely before 2017 says Uttarpradesh deputy CM Keshav prasad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X