ஓய்ந்தது பிரச்சாரம்..உபியில் நாளை மறுநாள் இறுதி கட்ட தேர்தல்.. யோகி VS அகிலேஷ்.. யாருக்கு செல்வாக்கு
லக்னோ : இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேச மாநில இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று பிரச்சாரம் ஓய்ந்து உள்ளது. உபி மக்கள் யாருக்கு வாய்ப்பளிக்க போகிறார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.
இந்நிலையில் மாநிலத்தில் ஏழாவது கட்ட தேர்தல் மார்ச் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் உத்திர பிரதேச தேர்தலில் தனித்தனியாக பலப் பரிட்சை நடத்துகின்றன.

உத்திரபிரதேச தேர்தல்
உத்திரபிரதேசத்தில் அசம்கர், மௌ, ஜான்பூர், காஜிபூர், சந்தோலி, வாரணாசி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக மார்ச் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தின் ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட தேர்தலையொட்டி மத்திய மாநில பொது நிறுவனங்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்காக நாளை மறுநாள் அதாவது மார்ச் 7ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

7 கட்ட வாக்குப் பதிவு
403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது. 2ஆம் கட்ட வாக்குப் பதிவு 14ஆம் தேதியும், 3ஆம் கட்ட வாக்குப் பதிவு 20ஆம் தேதியும், 4ஆம் கட்டமாக வாக்குப் பதிவு 23ஆம் தேதியும், 5ஆம் கட்ட வாக்கு பதிவு 27ஆம் தேதியும் நடைபெற்றது. கடைசியாக 6ஆம் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 3ஆம் தேதியும் நடைபெற்று முடிவடைந்தது.

தீவிர பிரச்சாரம்
உத்திரபிரதேச மாநிலத்தில் இதுவரை 349 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் அதாவது மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் அவர் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

சூடு பிடித்த களம்
பிரச்சாரத்திற்கு இன்று இறுதி நாள் என்பதால் வாக்கு சேகரிப்பில் சூறாவளி பயணத்தை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மேற்கொண்டனர். வீதிவீதியாக கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தலைவர்களும் முக்கிய நகரங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மாலை 6 மணியுடன் பிரச்சார முடிந்துள்ள நிலையில், நாளை மறுநாள் காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உத்தரப் பிரதேச மாநில சட்டசபையை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications