லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வில் அம்பு சகிதமாக யோகி ஆதித்யநாத் சுவாமிகள் ஆலயம்.. உ.பி. பாஜக தொண்டர் கட்டிய கோவில்!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அம்மாநில பாஜக தொண்டர் ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் அரசியல் தலைவர்களில் சில தெய்வங்களாகப் போற்றப்படுகிற அபூர்வங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரை இன்றைக்கும் தெய்வமாக வழிபடுகிற தொண்டர்கள் உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் கோவில் கட்டி அசத்தியிருந்தார்.

9 ஆண்டு.. பெயரின்றி வளர்ந்த சிறுமி.. தெலுங்கானா முதல்வர் கேசிஆருக்காக காத்திருந்த தம்பதி! நெகிழ்ச்சி9 ஆண்டு.. பெயரின்றி வளர்ந்த சிறுமி.. தெலுங்கானா முதல்வர் கேசிஆருக்காக காத்திருந்த தம்பதி! நெகிழ்ச்சி

உ.பி. நிலவரம்

உ.பி. நிலவரம்

திராவிடம், பெரியார் மண், பகுத்தறிவு பேசுகிற தமிழகத்திலேயே இந்த நிலைமை என்றால் வட இந்தியாவில் கேட்கத்தான் வேண்டுமா? அதுவும் மதமாச்சரியங்கள் கோலோச்சிக் கிடக்கிற உத்தரப்பிரதேசத்துக்கு சொல்லத்தான் வேண்டுமா?. உத்தரப்பிரதேசத்தில் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றும் அங்கு பாபர் மசூதி கட்டப்பட்டுவிட்டது; அதனால் இடித்து தரைமட்டமாக்கினோம் என்றும் அயோத்தியை வன்முறை பூமியாக்கிய வரலாறும் நிகழ்ந்தது.

யோகி கோவில்

யோகி கோவில்

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியா அருகே அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பாஜக தொண்டர் கோவில் கட்டி வழிபாடும் நடத்தி வருகிறார். அயோத்தி அருகே மெளரியா கா பூர்வா என்ற இடத்தில்தால் யோகி ஆதித்யநாத் சுவாமிகள் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் வில் அம்புடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் சுவாமியாக காட்சி தருகிறார். இந்த யோகி ஆதித்யநாத் சுவாமிகள் ஆலயத்துக்கு கூட்டமும் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

ரூ7 லட்சம் செலவு

ரூ7 லட்சம் செலவு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய போதுதான் யோகி ஆதித்யநாத் சுவாமிகள் ஆலயக் கட்டுமான பணிகளும் தொடங்கின. இக்கோவிலில் யோகி ஆதித்யநாத் சிலை 20 அடி உயரத்தில் ஒளிவட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கட்டுமானத்துக்கு இதுவரை ரூ7 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாம்.

யூ டியூப் மூலம் வருவாய்

யூ டியூப் மூலம் வருவாய்

பாஜக மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் புகழ் பாடுவதற்காக யூ டியூப் சேனல் தொடங்கியுள்ளாராம் இக்கோவிலை கட்டிய மெளரியா. இந்த யூ டியூப் சேனல் மூலம் பெற்ற ரூ7 லட்சத்தை வைத்துதான் கோவில் கட்டி இருக்கிறாராம் மெளரியா. உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வலம் வரக் கூடிய புதிய கோயிலாக யோகி ஆதித்யநாத் கோவிலும் இடம்பெற்றுவிட்டது. ஜெய் யோகி சுவாமிகள்!

English summary
A temple has been built in the name of CM Yogi Adityanath in Maurya ka Purwa village near Bharatkund in Ayodhya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X