லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி இடைத்தேர்தல்: அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கோட்டையில் கொடி பறக்கவிட்ட பாஜக- குழிபறித்த மாயாவதி!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 2 லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்களில் ஆளும் பாஜக வெற்றி கொடி பறக்கவிட்டுள்ளது. பாஜக வென்ற 2 தொகுதிகளுமே சமாஜ்வாதி கட்சியின் கோட்டை என்பதால் இந்த வெற்றி மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் ஆஸம்கர் தொகுதி எம்.பி.யாக இருந்தவர் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதாவ். இன்னொரு லோக்சபா தொகுதியான ராம்பூரில், அகிலேஷின் உறவினரும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான ஆஸம்கான் எம்.பி.யாக இருந்தார்.

செம ட்விஸ்ட்.. திருமாவளவன் கண்ணாடி முன்னாடி நின்று.. ஸ்டாலினுக்கும் செக்.. ரவுண்டு கட்டும் பாஜகசெம ட்விஸ்ட்.. திருமாவளவன் கண்ணாடி முன்னாடி நின்று.. ஸ்டாலினுக்கும் செக்.. ரவுண்டு கட்டும் பாஜக

2 தொகுதி இடைத்தேர்தல்

2 தொகுதி இடைத்தேர்தல்

அகிலேஷ் யாதவும் ஆஸம்கானும் எம்.எல்.ஏக்களாக தேர்வானதால் எம்.பி. பதவிகளை இருவரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து ஆஸம்கர், ராம்பூர் தொகுதிகளுக்கு கடந்த 23-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 2 தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றி இருக்கிறது.

ஆஸம்கர் பாஜக வெற்றி

ஆஸம்கர் பாஜக வெற்றி

சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட ஆஸம்கர், ராம்பூர்ர் இரு தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருப்பது சமாஜ்வாதி கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். 2019 லோக்சபா தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆஸம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிட்டார். அப்போது அகிலேஷ் யாதவ் பெற்ற வாக்குகள் 6,21,578. உ.பி.யில் பாஜக அலை வீசிய போதும் யாதவ்கள், முஸ்லிம்கள், தலித்துகள் இணைந்து அகிலேஷ் யாதவுக்கு வாக்களித்ததால் அமோக வெற்றி கிடைத்தது.

வாக்கு பிரித்த மாயாவதி கட்சி

வாக்கு பிரித்த மாயாவதி கட்சி

தற்போது நடைபெற்ற இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் பாஜக ஆகிய மூன்றுமே தனித்துப் போட்டியிட்டன. சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்தர் யாதவ், 3,03,837 வாக்குகள் பெற்றார். மாயாவதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளர் 2,66,106வாக்குகள் பெற்றிருந்தார். பாஜகவின் தினேஷ்லால் யாதவ் 3,12,432 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியை அறுவடை செய்தார். பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகளைப் பெற்றதால் பாஜக எளிதாக வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ராம்பூரிலும் பாஜக

ராம்பூரிலும் பாஜக

இதேபோல்தான் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள ராம்பூர் தொகுதி இடைத்தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்டத்தை காண்பித்துவிட்டது. பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தலித்துகள் வாக்குகள் கணிசமாக பாஜகவுக்கு சென்றது. பாஜகவின் கன்ஷியாம் சிங் லோதிக்கு 3,67,104 வாக்குகளும் சமாஜ்வாதி கட்சியின் அசிம் ராசாவுக்கு 3,25,056 வாக்குகளும் கிடைத்தன. பகுஜன் சமாஜ் கட்சி தமது ஆட்டத்தை 2 தொகுதிகளில் காட்டாமல் இருந்தால் சமாஜ்வாதி கட்சிக்கே வெற்றி கிடைத்திருக்கும்.

English summary
Sources said BSP played spoilsport for SP candidates in UP By-Eelections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X