திமுக-வை பின்பற்றும் பாஜக.. உ.பி.யில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! யோகி ஆதித்யநாத் அதிரடி!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 6 கட்ட தேர்தல் இதுவரை நடந்து முடிந்திருக்கிறது.
7ம் கட்ட தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்தியாவே உற்று நோக்கும் தேர்தலின் கடைசி கட்ட பிரசாரங்கள் தீவிரமாகி வருகின்றது. 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி, பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பலத்த போட்டியில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. பெரிய கூட்டணிகள் இல்லாமல், பெரிய கட்சிகள் எல்லாம் சிறிய கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன.

7ம் கட்ட தேர்தல்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் இதுவரை 349 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. விரைவில் நடைபெறும் 7வது கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 54 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக வலுவாக இருக்கும் வாரணாசி மற்றும் அதன் பகுதிகளில் இந்த 7வது கட்டத்தில் தேர்தல் நடக்கிறது. இதற்காக பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பாஜக
இந்த தேர்தலின் கடைசி பிரசாரம் என்பதால், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை தீவிரபடுத்தி வருகின்றன. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், சோன்பந்த்ரா பகுதியில் பேரணியில் கலந்துகொண்டார். அப்போது, ''உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநகர பேரூந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பயணம் செய்யலாம்.

இலவசம்
அதேபோல், விவசாயத்துக்கு இலவச தண்ணீர் விடப்படும். வருடத்துக்கு இரண்டு முறை இலவச சிலிண்டர் கொடுக்கப்படும் என்றார். உபி பிரசாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ''நான் இந்த மாநிலத்தின் முதல்வராக இருந்திருக்கிறேன். ஆனால் என்னைவிட சிறந்த முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டிருக்கிறார்'' என்றார்.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
CJP Protest LIVE: அடுத்தக்கட்ட போரட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி! பாஜகவுக்கு நெருக்கடி -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications