இ.வி.எம் மிஷின்களை எடுத்து சென்றதில் விதிமீறல் உள்ளது.. ஆனால் முறைகேடு இல்லை: உ.பி. தேர்தல் அதிகாரி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நாளை சட்டசபை தேர்தலில் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறிய புகார் உண்மைதான் என தேர்தல் அதிகாரி ஒப்புக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்தால் பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களித்ததாக ஒப்புகைச் சீட்டில் காட்டுகிறது என்கிற புகார் எழுந்தது. ஆனால் இதனை அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்தனர். உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள் கூறப்பட்டன.

இந்த நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க வேட்பாளர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டிருந்தார். இதனால் கண்கொத்தி பாம்பாக சமாஜ்வாதி கட்சியினர் இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். சில இடங்களில் வேட்பாளர்கள் பைனாகுலர் மூலம் 3 ஷிப்ட் போட்டு இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வேட்பாளர்களுக்கு தெரியாமல் வேறு இடங்களுக்கு மாற்றுவதாக அகிலேஷ் யாதவ் நேற்று பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், அயோத்தியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெறப் போகிறது. இதனால் தேர்தல் ஆணைய அதிகாரிகளைக் கொண்டு பாஜக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்துள்ளனர். உள்ளூர் வேட்பாளர்களுக்கு தெரிவிக்காமல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இது சமாஜ்வாதி கட்சியின் வாக்குகளை திருடுவதற்கு சமமானது என கொந்தளித்திருந்தார். இதேபோல் வாரணாசியிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக கூறி சமாஜ்வாதி கட்சியினர் திடீர் போராட்டம் நடத்தினர்.
அகிலேஷ் யாதவின் இந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டு உண்மை என தேர்தல் அதிகாரிகள் மழுப்பலான ஒரு விளக்கம் அளித்துள்ளனர். வாரணாசி தேர்தல் ஆணைய அதிகாரி தீபக் அகர்வால் கூறுகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விதிமுறைகளை அதாவது புரோட்டகால் மீறி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது உண்மைதான். ஆனால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குகளை மாற்றுவதற்காக அவை கொண்டு செல்லப்படவில்லை. சில பயிற்சிகளுக்காக கொண்டு செல்லப்பட்டது என்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications