பாஜக அலையில் மாயமான மாயாவதி.. சரண்டரான பகுஜன் சமாஜ்.. 4 முறை முதல்வராக இருந்தவர் நிலைமையை பாருங்கள்
லக்னோ: நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மிகப்பெரிய தோல்வியைத் தழுவி இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மையோடு ஆட்சியில் இருந்த கட்சி இப்போது ஒற்றை இலக்கத்தில் முன்னிலையில் இருக்கிறது.
Recommended Video
உத்தரப்பிரதேச தேர்தலை மிக முக்கியமாக இந்தியாவே உற்று நோக்கிவருகிறது. அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான 'செமி பைனல்' ஆக கட்சிகள் கருதியது. உத்தரப்பிரதேச தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.
எதிர்பார்த்ததுபோலவே, உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. சமாஜ்வாதி கட்சி அதற்கு அடுத்த இடத்தில் முன்னிலையில் இருக்கிறது. விவசாயிகள் போராட்டம், லக்கிம்பூர் சம்பவம் எல்லாம் பாஜகவுக்கு எதிராக பார்க்கப்பட்டது, ஆனாலும் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுவருகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் பாஜக 267 இடத்திலும், சமாஜ்வாதி 127 இடத்திலும், காங்கிரஸ் 3 இடத்திலும், பகுஜன் சமாஜ் 3 இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன.

பகுஜன் சமாஜ்
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி இந்தத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. 2017 தேர்தலில் 19 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. இந்த முறை தற்போது வரை 3 இடங்களில் தான் பகுஜன் சமாஜ் முன்னிலையில் இருக்கிறது. தலித் வாக்குகள், முஸ்லிம் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குகள் கொஞ்சமும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு விழவில்லை என்பதே நிதர்சனம்.

மாயாவதி
உத்தரப்பிரதேசத்தில் 12வது சட்டசபைத் தேர்தலில் முலாயம் சிங்குடன் கூட்டணி அமைத்து, பாஜகவை தோற்கடித்தார் மாயாவதி. 1995ல் முதல் தலித் பெண் முதல்வராக உத்தரப்பிரதேசத்தில் தேர்வானார். அதன்பிறகு ஆட்சிக் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது. அதன்பிறகு, 1997ல் மீண்டும் முதல்வராக தேர்வானார் மாயாவதி. அடுத்து நடந்த 2002 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். அதன்பிறகு சமாஜ்வாதியிடம் ஆட்சியை இழந்த மாயாவதி, 15வது சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று, 2007ல் உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக நான்காவது முறையாக மாயாவதி பதிவியேற்றார்.

சிறுபான்மையின் குரல்
'பகுஜன்' என்றால் பெரும்பான்மை என்று பொருள். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களின் குரலாக கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக உத்திரப்பிரதேசத்தில் ஒலித்துவரும் குரலாக இருக்கிறது மாயாவதியின் குரல். மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்த மாயாவதி, நடந்து முடிந்துள்ள இந்த தேர்தலில் பாஜக அலையில் கரைந்துபோய்விட்டார்.

சமாஜ்வாதி
பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற காரணத்தால், சமாஜ்வாதி கட்சியுடன் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தார் மாயாவதி. அந்த தேர்தலிலும் தோற்றதால், கூட்டணியை முறித்துகொண்டு, அடுத்த தேர்தலில் தனியாக களம் இறங்கினார். ஆனாலும் எதிலும் தோல்வியே சந்தித்து வந்தார் மாயாவதி. இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தை ஆரம்பித்தன. ஆனால், மாயாவதி காலம் தாழ்த்தியே தன்னுடைய பிரசாரத்தை தொடங்கினார். அவரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் அவருடைய தொண்டர்கள் சோர்ந்து போனார்கள். அவர்களை தக்க வைக்க முடியவில்லை.

வலுவான கட்சி
பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என மக்களிடம் கோரிக்கை வைத்தார் மாயாவதி. கிழக்கு உத்தரப்பிரதேசம், ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் பகுஜன் சமாஜ் செல்வாக்கோடு இருந்தது. அங்கு தேர்தல் நடந்த போது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி இன்னும் உயிர்ப்போடு இருப்பதாகவும், அவர்கள் வலுவாக இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா பேசி இருந்தார்.

வலிமை
வலிமை மிக்க தலைவராக மாயாவதி பார்க்கப்பட்டார். உத்தரப்பிரதேசம் தாண்டியும், இந்தியா முழுவதும் ஒரு சக்தியாகவே மாயவதி அறியப்பட்டார். ஆனால், சமீபகாலமாக பகுஜன் சமாஜ் கட்சி ஓரமாக ஒதுங்கி இருக்கிறது. அதிரடியாக அரசியல் செய்த மாயாவதியின் போர்குணம் காணாமல் போயுள்ளதுதான் மிகப்பெரிய தோல்விக்கு காரணமாக இருக்கிறது. பகுஜன் சமாஜின் வெற்றிக்கு வித்திட்டவர் தான், இன்று தோல்விக்கும் பொறுப்பேற்கவேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications