கிரைம்ரேட் ஏறிட்டே போகுதே! சமாஜ்வாதி கட்சி பிரச்சார கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம்! 7 பேர் கைது
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி பிரசார கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிலர் கோஷம் போட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதிகள், குண்டர்களுக்கு ஆதரவான கட்சி சமாஜ்வாதி என்று பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இவ்வாறு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் 6 ஆம் கட்ட தேர்தல் வரும் 3ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

பாகிஸ்தான்
மீதமிருக்கும் வாக்குப்பதிவுக்காக உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்ற சமாஜ்வாதி கட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பபட்டதாக புகார் எழுந்தது.

வீடியோ
அந்த பிரச்சார கூட்டத்தின் வீடியோவை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அது சமாஜ்வாதி கட்சியின் பிரசார கூட்டம் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் வீடியோவில் இருக்கும் வேட்பாளர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் ஹண்டியா பகுதி காவல்துறையினர் கூறியுள்ளனர்.

வழக்குப்பதிவு
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹண்டியா சட்டசபைத் தொகுதி சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஹக்கிம் லால் பிந்த், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

மறுப்பு
ஹக்கிம் மேலும் கூறுகையில், தான் பங்கேற்ற பிரச்சார கூட்டங்களில் இதுபோன்ற கோஷங்கள் எழுப்பப் படவில்லை என்று கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்த சிலர் இது போன்ற டப்பிங் வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் கோஷம் எழுப்பிய 7 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications