உ.பி.யில் ஷாக்.. ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் லீக்.. தேர்வு ரத்து.. பலர் கைது!
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வு(UPTET) நடத்தப்படுகிறது. இதில் தேர்வு பெறுபவர்கள் மட்டுமே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய முடியும்.
இந்த தேர்வை அடுத்த மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்கள் மிக ஆர்வமாக தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தனர்.

வாட்ஸ்- அப்பில் வெளியான வினாத்தாள்கள்
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள்கள் வாட்ஸ்- அப்பில் வெளியாகி அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து தேர்வை ரத்து செய்து உ.பி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் வினாத்தாள்கள் வாட்ஸ்- அப்பில் வெளியாக காரணமாக இருந்த பலரை கைது செய்துள்ளனர்.

தேர்வு ரத்து செய்யப்படுகிறது
இது தொடர்பாக மாநில கல்வி அமைச்சர் சதீஷ் திவேதி கூறியதாவது:- UP-TET தேர்வில் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் கூடுதல் கட்டணம் இல்லாமல் தேர்வெழுதியவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம். இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த சிறப்பு அதிரடிப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும்' என்று அவர் கூறினார்.

ஏமாற்றமளிக்கிறது
இந்த விவகாரத்தால் தேர்வு எழுத காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ''தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்தோம். தேர்வு ரத்து ஏமாற்றமளிக்கிறது, இது காலியிடங்களை பாதிக்கிறது. ஆனால் சரியான நேரத்தில் அதைப் பற்றி எங்களுக்குத் தெரிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்'' என்று புலந்த்ஷாஹரைச் சேர்ந்த கவுரவ் சர்மா கூறியுள்ளார்.

அரசு அதிகாரிகளின் அலட்சியம்
அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு மாணவர் கூறுகையில், 'அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே அரசு தேர்வு தேதிகளை மாற்றி அறிவித்தது. இப்போது அது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி இந்த தேர்வு எப்போது நடக்கும் என்று உறுதியாக தெரியவில்லை. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பேண்டும்' என்று கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications