லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனல் பறக்கும் அரசியல்.. ஆட்சி கனவில் கட்சிகள்.. உ.பி.யில் நாளையுடன் ஓய்கிறது முதல்கட்ட பிரச்சாரம்

By
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான‌ பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைகிறது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உத்தர பிரதேச தேர்தல் 2022: 2017-க்குப் பிறகு வன்முறை ஏதும் நடக்கவில்லை என்ற யோகியின் கூற்று உண்மையா?உத்தர பிரதேச தேர்தல் 2022: 2017-க்குப் பிறகு வன்முறை ஏதும் நடக்கவில்லை என்ற யோகியின் கூற்று உண்மையா?

 உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் பாஜக இன்னும் துரிதமாக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

 முதல் கட்ட தேர்தல்

முதல் கட்ட தேர்தல்

உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் தேர்தல், வரும் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த முதற்கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 11 மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. இந்த 58 தொகுதிகளில் மொத்தம் 615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல்

தேர்தல்

இந்தியாவே எதிர்நோக்கி இருக்கும் உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன. சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான‌ பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைகிறது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதையடுத்து, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரசாரம்

பிரசாரம்

ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர ஸ்டார் பேச்சாளர்களைக் களமிறக்கியுள்ள‌து. பிரதமர் மோடி டிஜிட்டல் பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாவட்டம் மாவட்டமாக சென்று பிரசாரம் செய்கிறார். முதல்வர் யோகி ஆதித்யநாத் மனுத்தாக்கல் செய்தபோது உடனிருந்தார். அதேபோல், சமாஜ்வாதி கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் ப்ரியங்கா காந்தி மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். நாளை மாலையுடன் பிரசாரம் முடியவுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் அனல் பறக்கும் பிரசாரங்கள் நடந்து வருகின்றன.

English summary
The campaign for the first phase of the Uttar Pradesh Assembly elections ends tomorrow evening. Uttar Pradesh Assembly elections for 403 constituencies will be held in seven phases from February 10 to March 7. The vote count will take place on March 10.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X