லக்கிம்பூர் விவசாயிகள் கொலை.. சிறையிலிருந்து ஜாமினில் விடுதலையான மத்திய அமைச்சர் மகன்
லக்னோ: லக்கிம்பூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மத்திய இணை அமைச்சர் மகன் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக, மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆஷிஷ் மிஸ்ராவுவின் ஜாமின் மனுவை விசாரித்த் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு ஜாமின் வழங்கியது. இந்நிலையில், ஜாமின் பெற்று இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார் ஆஷி மிஸ்ரா.

விவசாய சட்டம்
விவசாய சட்டங்களை ரத்து செய்யச் சொல்லி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர். ஓராண்டு காலத்துக்கும் மேல் விவசாய போராட்டம் நடந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் விவசாய சட்டங்களை ரத்து செய்து உத்தரவிட்டது மத்திய அரசு.

லக்கிம்பூர்
உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அமைச்சருக்குச் சொந்தமான கார் மோதி 4 விவசாயிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை செய்தது மத்திய இணை அமைச்சரின் மகன் என தெரியவந்தது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமின்
ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனு, லக்கிம்பூர் கெரியின் கீழ் மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. கடந்த மாதம், இந்த மனுவை விசாரித்த லக்னோ கிளை உயர்நீதிமன்றம் தனது உத்தரவை ஒத்திவைத்தது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது அலகாபாத் நீதிமன்றம்.

விடுதலை
லக்கிம்பூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதும், இன்று சிறையில் இருந்து விடுதலையானார். லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்திய உத்தரப்பிரதேச காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேரை கைது செய்தது.

தேர்தல்
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் நடந்து வரும் நிலையில், விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றதாக சொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகரின் மகன் விடுதலை ஆகியிருப்பது உத்தரப்பிரதேசத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் கிடைத்ததற்கு,
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications