Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் 38 வயசு.. இறந்த நடிகர் வைரவன்! 2 வயது குழந்தையுடன் நிர்கதியான மனைவி - உதவுமா நடிகர் சங்கம்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் இன்று உயிரிழந்த நிலையில், உடைந்த ஓட்டு வீட்டில் வாழ்வாதரத்திற்கு வழியின்றி தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு நடிகர் சங்கம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

மதுரையை சேர்ந்தவர் நடிகர் ஹரிவைரவன் (38). சுசீந்திரன் இயக்கி விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடி குழு-1, குள்ளநரிக்கூட்டம், கார்த்தி நடித்த நான் மகான் அல்ல, விக்ராந்த் நடித்த வெண்ணிலா கபடி குழு-2, கார்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பராக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ஹரி வைரவன் ரசிகர்களால் அதிக அளவில் பாராட்டுக்களை பெற்றார்.

உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், இதயம் மற்றும் கிட்னியில் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. போதிய சினிமா வாய்ப்புகள் இல்லாததால் வருமானம் இன்றி தவித்து வந்த ஹரி வைரவன், நகை, பணம் என மொத்தத்தையும் கொடுத்து அதற்கான சிகிச்சையை பெற்று வந்து இருக்கிறார்.

வீடியோ வெளியிட்ட வைரவன்

வீடியோ வெளியிட்ட வைரவன்

இந்த நிலையில் கடந்த சில மாதங்கள் முன், உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பேசுவதற்கு கூட சிரமப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், "11 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருக்கிறது. உடலின் பல பாகங்கள் வீக்கமடைந்து பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.

கருணை கொலை பண்ணுங்க

கருணை கொலை பண்ணுங்க

என்னை கவனிக்க மனைவி படும் சிரமத்தை காண முடியவில்லை. என்னை கருணை கொலை செய்துவிடுங்கள். உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவர்கள் தனது உயிருக்கு 6 மாதங்கள் கெடு விதித்துவிட்டனர். தற்போது சிகிச்சைக்கு கூட பொருளாதாரம் இன்றி சிரமப்படுகிறேன். நான் இறந்தால் அதன் பிறகு மனைவியையும் குழந்தைகளையும் யார் கவனித்துக்கொள்வார்கள்?" என வேதனை தெரிவித்தார்.

நடிகர்கள் உதவி

நடிகர்கள் உதவி

இவரது இந்த வீடியோ தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் அவருக்கு பொருளாதார உதவிகளை வழங்கினர். நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்டோரும் ஹரி வைரவனுக்கு உதவி செய்தார்கள். இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் தனியார் மருத்துவமனையில் ஹரி வைரவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காலமானார்

காலமானார்

இந்த நிலையில் இன்று அதிகாலை 12:15 மணியளவில் உடல்நலக்குறைவால் காலாமானார் ஹரி வைரவன். அவரது உடல் மதுரை கடச்சனேந்தல் முல்லைநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றே அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படும் என குடும்பத்தினர் அறிவித்து உள்ளார்கள்.

ஹரி வைரவன் குடும்பம்

ஹரி வைரவன் குடும்பம்

38 வயதான நடிகர் ஹரி வைரவனுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு கவிதா (30) என்ற பெண்ணுடன் திருமணமானது. அவருகளுக்கு 2 வயதில் யோஷினிஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. நடிகர் ஹரிவைரவனின் ஊதியத்தை வைத்து மட்டுமே குடும்பத்தை நடத்தி வந்த அவரது மனைவி தற்போது உடைந்த ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். தற்போது கணவரின் மறைவால் குழந்தையோடு செய்வதறியாது நிற்கிறார்.

நடிகர் சங்கத்திடம் கோரிக்கை

நடிகர் சங்கத்திடம் கோரிக்கை

தமிழ்நாடு நடிகர் சங்கம் உயிரிழந்த நடிகர் ஹரி வைரவனின் குழந்தை மற்றும் குடும்பத்தின் சூழலை உணர்ந்து அவர்களின் வாழ்வாதரத்திற்காக பொருளாதார ரீதியாக உதவிகளை செய்து தர வேண்டும் என ஹரிவைரவனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+